AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விஜய் சேதுபதி படத்தில் சிறப்பு நடனம் ஆடிய நடிகை வாமிகா கபி

Actress Wamiqa Gabbi danced Pocket Novel Movie | பான் இந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை வாமிகா கபி. இவர் நடிகர் விஜய் சேதுபதியின் பாக்கெட் நாவல் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

விஜய் சேதுபதி படத்தில் சிறப்பு நடனம் ஆடிய நடிகை வாமிகா கபி
நடிகை வாமிகா கபிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Nov 2026 16:11 PM IST

இந்தி சினிமாவில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான படம் ஜப் வி மெட். இந்தப் படத்தின் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை வாமிகா கபி (Wamiqa Gabbi). இவர் கடந்த 2007-ம் ஆண்டு தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய நடிகை வாமிகா கபி தொடர்ந்து பான் இந்திய மொழிகளான இந்தி, தமிழ், பஞ்சாபி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை வாமிகா கபி நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான படம் டிசி. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக நடித்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நடிகை வாமிகா கபி இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் பஞ்சாபி மொழிகளில் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் மற்றும் அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

விஜய் சேதுபதி படத்தில் சிறப்பு நடனம் ஆடிய நடிகை வாமிகா கபி:

இந்த நிலையில் நடிகை வாமிகா கபி தற்போது தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள பாக்கெட் நாவல் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அதன்படி இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை மாளவிகா மோகனன் நாயகியாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் வாமிகா கபி ஆடிய நடன வீடியோ ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… Santhanam: ஸாம்பீ பராக்… சந்தானத்தின் லவ் பைட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை வாமிகா கபி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… லக்ஷ்மி பிரியா – தன்யா பிரச்சனை.. லக்ஷ்மி பிரியாவை கேள்விகளால் பெண்டு நிமித்திய விஜய் சேதுபதி!

Follow Us