தமிழகத்தின் இளம் வயது முதல்வர்… ஜோசப் விஜய் எந்த இடத்தில் உள்ளார் தெரியுமா?
Tamil Nadu Youngest Chief Ministers: தமிழகத்தில் 1969- ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 18 முதல்வர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் யார் இளம் வயதில் முதல் அமைச்சராக பதவி ஏற்றனர் என்பது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
தமிழகத்தில் கடந்த 1969- ஆம் ஆண்டு மாநிலத்தின் முதல் முதல்வராக கா.ந. அண்ணாதுரை பதவி ஏற்றார். இவரைத் தொடர்ந்து, சுமார் 60 ஆண்டு காலம் 17 முதலமைச்சர்கள் ஆட்சி அமைத்து தமிழகத்தை ஆண்டுள்ளனர். இவர்களில் 18- ஆவதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 10- ஆம் தேதி) தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றார். தமிழகத்தின் 18 முதல்வர்களின் யார் குறைந்த வயதில் முதல்வராக பதவி ஏற்றார். அப்படி முதல்வராக பதவி ஏற்கும் போது, அவர்களது வயது என்ன என்பது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் நாம் சற்று விரிவாக பார்க்கலாம். இதில், 1991- ஆம் ஆண்டில் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது 43- ஆவது வயதில் முதல்வராக பொறுப்பேற்று முதலிடத்தில் உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவர் மு. கருணாநிதி 44 வயதில் பதவி ஏற்று 2- ஆவது இடத்தில் உள்ளார்.
தவெக தலைவர் ஜோசப் விஜய்க்கு எந்த இடம்
ஓ. பன்னீர்செல்வம் 50 வயதில் பதவி ஏற்று 3- ஆவது இடத்திலும், காமராஜர் 51 வயதில் பதவி ஏற்று 4- ஆவது இடத்திலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 51 வயதில் தமிழகத்தின் முதல் அமைச்சராக பதவி ஏற்று 5- ஆவது இடத்திலும், அண்ணாதுரை 57 வயதில் பதவி ஏற்று 6- ஆவது இடத்திலும், எம். ஜி. ஆர். 60 வயதில் பதவி ஏற்று 7- ஆவது இடத்திலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி 62 வயதில் பதவி ஏற்று 8- ஆவது இடத்திலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் 68 வயதில் பதவி ஏற்று 9-ஆவது இடத்திலும் உள்ளனர்.
மேலும் படிக்க: மேஜையை தூக்கிய முதல்வர் விஜய்.. பதறிப்போன அதிகாரிகள்.. விழா மேடையில் நடந்த சம்பவம்!




சாதனை செய்த வரலாற்றில் இடம் பிடித்த முதல்வர்கள்
இதில, காமராஜர் எளிமை, கல்வி வளர்ச்சி மற்றும் நிர்வாக திறன் காரணமாக “கல்வி கண் திறந்த தலைவர்” என்ற பெயரை பெற்றார். இதே போல, அறிஞர் அண்ணா காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி திமுகவை முதல் முறையாக ஆட்சிக்கு கொண்டு வந்த தலைவராக வரலாற்றில் இடம் பிடித்தார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி தமிழக அரசியலில் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்திய தலைவராக உருவெடுத்தார்.
கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் முதல்வர் பதவி
தமிழகத்தின் முதல் பெண் அமைச்சராக பதவி ஏற்ற ஜெயலலிதா மிகவும் இளம் வயதில் ஆட்சியை பிடித்த தலைவர்களில் ஒருவராகவும் தமிழக அரசியலில் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராகவும் இருந்தார். இதே போல, தவெக தலைவர் விஜய் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்ததுடன், முதல்வரானதும் புதிய அரசியல் அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: தமிழக முதல்வராக பதவி ஏற்றார் விஜய்.. தலைவர்கள் வாழ்த்து!