CM Vijay Swearing-in Ceremony Highlights: புது அரசு.. புது முதல்வர்.. ஆட்சியை தொடங்கிய விஜய்!
Tamil Nadu Government Formation News Updates in Tamil: 2026ம் ஆண்டு தமிழ்நாடு தேர்தல் பல பரபரப்புகளை உள்ளடக்கியதாக இருந்தது. புதியதாக கட்சி தொடங்கிய விஜய் அதிக சீட்டுகளை வென்று முதலமைச்சர் ரேஸில் முன்னேறினார். ஆனாலும் தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டு மற்ற கட்சிகள் ஆதரவு அளித்தன. இந்நிலையில் இன்று அவர் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
டிவிகே தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கிறார். காலை 10 மணிக்கு அவர் தமிழகத்தின் ஒன்பதாவது முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இந்தப் பதவியேற்பு விழா சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறும். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியும் இதில் கலந்துகொள்வார். நேற்று, சனிக்கிழமை, அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். நேற்று மாலை, லோக்பவனில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, மற்ற கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களையும் விஜய் ஆளுநரிடம் வழங்கினார். தேவையான பெரும்பான்மையை விட அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னிடம் இருப்பதாக விஜய் ஆளுநருக்கு உறுதியளித்தார். இந்நிலையில் இன்று அவர் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருடன் சில அமைச்சர்களும் இன்று பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் காணலாம்
LIVE NEWS & UPDATES
-
பணி சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் – அண்ணாமலை
தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் மற்றும், தவெக தொண்டர்கள் அனைவருக்கும், எனது நல்வாழ்த்துக்கள். தமிழகத்தின் முதல்வராக உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் – அண்ணாமலை
-
மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.- ஸ்டாலின்
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.- ஸ்டாலின்
பதிவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை…
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 10, 2026
-
ஆட்சித் திறமையும்தான் வேணும் – ஸ்டாலின்
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும் – ஸ்டாலின்
-
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் – முக ஸ்டாலின்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் – முக ஸ்டாலின்
-
விஜய்க்கு ராகுல்காந்தி வாழ்த்து
தமிழ்நாடு மக்கள் புதிய தலைமுறை, புதிய குரல், புதிய கற்பனையை தேர்வு செய்துள்ளனர். தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைகளை காப்பாற்ற அவருக்கு எனது வாழ்த்துக்கள் – விஜய்க்கு ராகுல்காந்தி வாழ்த்து
-
கண்கலங்கிய முதல்வரின் தந்தை
தமிழ் சினிமாவில் நாயகனாக, தற்போது முதலமைச்சராக பதிவியேற்றிருக்கிறார் தளபதி விஜய். அவரின் பதிவியேற்பு விழாவில், இயக்குனரும், தவெக தலைவர் விஜய்யின் தந்தையாக இருப்பவர் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் விஜய் முதல்வராக பதவியேற்ற தருணத்தில் கண்களாகியுள்ளார்.
-
தற்காலிக சபாநாயகர் நியமனம்
தற்காலிக சபாநாயகரான சோழவந்தான் கருப்பையா நியமனம் செய்யப்பட்டார்
-
Tamil Nadu Chief Minister Vijay : நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்
தலைமைச் செயலகம் வந்த முதல்வர் விஜய்யை மூத்த அதிகாரிகள், முக்கிய துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்
-
சபாநாயகர் தேர்வு
மே12ம் தேதி சபாநாயகர் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
-
உங்கள் அரசு நமது பெருமைமிக்க மாநிலத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்
விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த, ஆர்.ஜே.பாலாஜி, உங்கள் நோக்கங்களையும் அறிந்திருப்பதால், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் முற்போக்கான உங்கள் அரசு நமது பெருமைமிக்க மாநிலத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கிறேன்
-
நாளை எம். எல்.ஏக்கள் பதவியேற்பு
நாளை காலை 9.30 மணிக்கு மற்ற எம். எல்.ஏக்கள் பதவியேற்பு நடைபெறும் என அறிவிப்பு
-
முதல்வர் நாற்காலியில் முதல்வர் விஜய்
பதிவியேற்ற பின்பு தலைமைச் செயலகம் வந்த முதல்வர் விஜய் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து முக்கிய கோப்புகளின் கையெழுத்திட்டார்
-
என்னை ஏற்றுக்கொண்டீர்கள் – முதல்வர் விஜய்
உங்களுக்காக நன்றிக்கடன் செலுத்துவதற்காக வந்த எனக்கு, ‘நீ வா விஜய்… நாங்க பாத்துக்கிறோம்’ என சொல்லி, அவ்வளவு அன்பாகவும், அவ்வளவு உறவாகவும் என்னை ஏற்றுக்கொண்டீர்கள் – முதல்வர் விஜய்
-
வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதல்வர் விஜய் உறுதி
தமிழ்நாடு அரசின் நிலைமை என்ன? எனவும், வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதல்வர் விஜய் உறுதி
-
உங்கள் குடும்பத்தில் ஒருவன் – முதல்வர் விஜய்
உங்களில் ஒருவன், உங்கள் குடும்பத்தில் ஒருவன் மாதிரிதான். அப்படித்தான் நான் உணர்கிறேன் – முதலமைச்சர் விஜய்
-
மன்னர் பரம்பரையிலிருந்து வந்தவன் கிடையாது – முதலமைச்சர் ஸ்டாலின்
எனக்கும் வாழ்க்கையில் வறுமை என்றால் என்னவென்று தெரியும். பசி என்றால் என்னவென்று தெரியும். நான் ஒன்றும் மன்னர் பரம்பரையிலிருந்து வந்தவன் கிடையாது – முதலமைச்சர் ஸ்டாலின்
-
தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து
தமிழ்நாடு முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.@TVKVijayHQ
— Narendra Modi (@narendramodi) May 10, 2026
-
முதல்வர் விஜய் எச்சரிக்கை
என்னுடன் இருப்பவர்கள் தவறு செய்யலாம் என நினைத்தால் அதனை இப்போதே அழித்து விடுங்கள் என முதல்வர் விஜய் எச்சரிக்கை
-
பெண்கள் பாதுகாப்பில் மிகக்கடுமை – விஜய் திட்டவட்டம்
பெண்கள் பாதுகாப்பில் மிகக்கடுமையாக இருப்பேன் என விஜய் திட்டவட்டம்
-
செல்பி எடுத்து மகிழ்ந்த முதல்வர் விஜய்
மேடையில் இருந்து செல்பி எடுத்து மகிழ்ந்த முதல்வர் விஜய்
-
யாரையும் தவறு செய்ய விட மாட்டேன் – விஜய்
விஜய் தவறு செய்ய மாட்டேன் – யாரையும் தவறு செய்ய விட மாட்டேன் – விஜய்
-
போதைப்பொருள் தடுப்பு – விஜய் கையெழுத்து
போதைப்பொருள் தடுப்பை ஊக்குவிக்கும் விதமாக புது பாதுகாப்பு திட்டத்துக்கான கையெழுத்திட்டார் விஜய்
-
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை உருவாக்கம் – விஜய் கையெழுத்து
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை உருவாக்கம் திட்டத்துக்கு கையெழுத்திட்டார் முதல்வர் விஜய்
-
முதல் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய்
200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய்
-
முக்கிய கோப்புகளில் கையெழுத்திட உள்ள முதலமைச்சர் விஜய்
விழா மேடையிலேயே முக்கிய கோப்புகளில் கையெழுத்திட உள்ள முதலமைச்சர் விஜய்
-
Tamil Nadu Chief Minister Vijay : முடிவடைந்தது பதவியேற்பு விழா
வந்தே மாதரம் பாடலுடன் முடிவடைந்தது முதல்வர் பதவியேற்பு விழா
-
சிவகாசி கீர்த்தனா அமைச்சரானார்
சிவகாசி Mla கீர்த்தனா அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்
-
அமைச்சரானார் பிரபு
தவெக கட்சியின் காரைக்குடியின் பிரபு அமைச்சராக பதவியேற்றார்
-
அமைச்சரானார் நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன்
தவெகவில் இருந்து அமைச்சரானார் நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன்
-
அமைச்சரானார் செங்கோட்டையன், வெங்கட ரமணன்
தவெகவின் செங்கோட்டையன் புது அமைச்சராக பதவியேற்றார்
-
அமைச்சராக பதவியேற்றார் அருண்ராஜ்
தவெக வின் அமைச்சராக பதவியேற்றார் அருண்ராஜ்
-
அமைச்சர்களாக பதவியேற்ற ஆனந்த ஆர்ஜூனா, ஆனந்த்!
தவெகவின் ஆதவ் அர்ஜூனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்
-
Tamil Nadu Chief Minister Vijay : முதலமைச்சராக பதவியேற்றார் தவெக தலைவர் விஜய்
தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் தவெக தலைவர் விஜய்
-
தமிழக ஆளுநர் மேடைக்கு வருகை
பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்காக தமிழக ஆளுநர் மேடைக்கு வருகை
-
தவெக நிர்வாகிகள் உற்சாக கூக்குரல்
விழா மேடைக்கு விஜய் வந்ததும் கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் உற்சாக கூக்குரல்
-
Tamil Nadu Chief Minister Vijay : விழா மேடைக்கு வந்த விஜய்
விழா மேடைக்கு வந்த விஜய், ராகுல்காந்தி. உடன் அமைச்சர்களாக பதவி ஏற்பவர்களும் வந்தனர்
-
Tamil Nadu Chief Minister Vijay : அரியணை ஏறுகிறார் தவெக தலைவர் விஜய்
தமிழ்நாட்டின் முதல்வராக சற்று நேரத்தில் அரியணை ஏறுகிறார் தவெக தலைவர் விஜய்
-
தமிழக ஆளுநருக்கு வரவேற்பு
தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை மலர்கொத்து கொடுத்து வரவேற்றார் விஜய்
-
கோட் சூட் அணிந்து வந்த விஜய்
கோட் சூட் அணிந்து விழா மேடைக்கு வந்த தவெக தலைவர் விஜய்
-
ராகுல்காந்தி நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வருகை
விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வருகை
வீடியோ
#WATCH | Tamil Nadu | Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi arrives at the Jawaharlal Nehru Stadium in Chennai, where TVK Chief C Joseph Vijay will take oath as the Chief Minister of Tamil Nadu, shortly. pic.twitter.com/xgXEyzAnNs
— ANI (@ANI) May 10, 2026
-
தமிழக ஆளுநர் கிளம்பினார்
விஜய்க்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக தமிழக ஆளுநர் கிண்டி மக்கள் மாளிகையில் இருந்து கிளம்பினார்
-
CM Vijay Swearing-in : பல்வேறு துறையினர் பங்கேற்பு
திரைத்துறையினர் கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். மேலும் நீதித்துறையை சேர்ந்தவர்களும் விழாவில் பங்கேற்பு
-
ம்யூனிஸ்ட் கட்சியினரும் பங்கேற்பு
விஜய் பதவியேற்பு விழாவில் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பங்கேற்றுள்ளனர். அதுபோக தவெக வின் முக்கிய மாவட்ட தலைவர்கள், அமைச்சர்கள் குடும்பத்தினரும் பங்கேற்றுள்ளனர்
-
திரைப்பிரபலங்களும் வருகை
நடிகை த்ரிஷா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் தமிழக முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்குபெறுவதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வருகை
-
TVK Vijay : பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
நேரு உள்விளையாட்டு அரங்குக்கு வருகை தந்த விஜய்க்கு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
-
நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வருகை தந்தார் விஜய்
முதல்வராக பதவியேற்பதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வருகை தந்தார்
-
விழாவில் பங்கேற்கும் த்ரிஷா
விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நடிகை த்ரிஷா வீட்டில் இருந்து கிளம்பினார்
வீடியோ
#WATCH | Tamil Nadu: Actor Trisha Krishnan leaves from her residence in Chennai. pic.twitter.com/M7XFTKyKSt
— ANI (@ANI) May 10, 2026
-
CM Vijay Swearing-in : இன்று 9 பேர் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்பு
தவெக தலைவர் விஜய்யுடன் சேர்ந்து இன்று 9 பேர் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். மிக முக்கியமான துறைகளுக்கு அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது
-
ராகுல்காந்தி பங்கேற்பு
விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி தமிழ்நாடு வருகை.
-
முக்கிய உறவினர்கள் வருகை
விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக விஜய் தாய் , தந்தை உள்ளிட்ட முக்கிய உறவினர்கள் நேரு உள்விளையாட்டு அரங்குக்கு வருகை
-
Vijay : விஜய்க்கு உற்சாக வரவேற்பு
விஜய் செல்லும் வழியெல்லாம் அவரது ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்
வீடியோ
#WATCH | Tamil Nadu: TVK Chief and CM-designate Vijay leaves from his residence.
He will take oath as the Chief Minister of Tamil Nadu today at Jawaharlal Nehru Stadium in Chennai.
(Source: TN DIPR) pic.twitter.com/Cydz5VkjfC
— ANI (@ANI) May 10, 2026
-
TVK Vijay : முழு பாதுகாப்பு கான்வாய் பாதுகாப்பு
முதலமைச்சருக்கான முழு பாதுகாப்பு கான்வாய் வாகனங்களுடன் தவெக தலைவர் விஜய் சென்னை நேரு விளையாட்டு அரங்கத்துக்கு செல்கிறார்
-
புறப்பட்டார் விஜய்
இன்று பதவியேற்பு நடக்கவுள்ள நிலையில் தன்னுடைய நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்
-
TVK Vijay Swearing-in : இன்று பதவியேற்கும் விஜய்
ஆளுநரிடம் பெரும்பான்மையைை நிரூபித்த நிலையில் தவெக தலைவர் விஜய் மே 10 2026 இன்று காலை 10 மணியளவில் முதல்வராக பதவியேற்கிறார்
நேரலை
Published On - May 10,2026 8:00 AM