தமிழக முதல்வராக பதவி ஏற்றார் விஜய்.. தலைவர்கள் வாழ்த்து!
Leaders Wishes To Chief Minister C Joseph Vijay | தமிழகத்தின் 17வது முதலமைச்சராக தவெக தலைவர் சி.ஜோசப் விஜய் பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில், முதல்வராக பதவி ஏற்றுள்ள அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை, மே 10 : தமிழகத்தின் 17வது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் இன்று பதவி ஏற்றார். அவருடன் இணைந்து, 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் புதியதாக பதவி ஏற்றுள்ள தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு எந்த எந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அவர் சிறந்த ஆட்சி நடத்த எனது வாழ்த்துக்கள். மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தமிழகத்துடன் இணைந்து மத்திய அரசு செயல்படும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.@TVKVijayHQ
— Narendra Modi (@narendramodi) May 10, 2026
ராகுல் காந்தி வாழ்த்து
தமிழ்நாடு மக்கள் புதிய தலைமுறை, புதிய குரல், புதிய கற்பனையை தேர்வு செய்துள்ளனர். தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைகளை காப்பாற்ற அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay – may he fulfil the hopes of the people of Tamil Nadu. pic.twitter.com/sp8FsMLBOb
— Rahul Gandhi (@RahulGandhi) May 10, 2026
அண்ணாமலை வாழ்த்து
தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய் அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் மற்றும் தவெக தொண்டர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் என்று தமிழகத்தின் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் மற்றும், தவெக தொண்டர்கள் அனைவருக்கும், எனது நல்வாழ்த்துக்கள்.
தமிழகத்தின் முதல்வராக உங்கள் பணி சிறக்க என்…
— K.Annamalai (@annamalai_k) May 10, 2026