AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை… 1,000 அரசு ஊழியர்களுக்குத் தீவிர பயிற்சி!

Vote Counting Training: தமிழகத்தில் மே 4- ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதில், ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குகள் எண்ணுவது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 234 தொகுதிகளில் இருந்து சுமார் 1000 பேர் பங்கேற்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை… 1,000 அரசு ஊழியர்களுக்குத் தீவிர பயிற்சி!
சென்னையில் வாக்கு எண்ணும் பயிற்சி
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 29 Apr 2026 15:37 PM IST

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவியது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகிற மே 4- ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக மாநிலம் முழுவதும் 62 மையங்களில் வாக்குகள் எண்ணுவதற்கான பல்வேறு ஏற்பாடுகள் தேர்தல் ஆணையம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை 4- ஆம் தேதி என்ன உள்ள நிலையில், வாக்கு எண்னும் மின்னணு இயந்திரங்களின் செயல்பாடுகள் முறையாக கையாள்வதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று புதன்கிழமை ( ஏப்ரல் 29) நடைபெற்றது.

234 தொகுதிகளை சேர்ந்த ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்பு

சென்னையில் நடைபெற்ற இந்த பயிற்சியில் 234 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலர்கள் என சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றனர். புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஞானவேல் என்ற ஊழியர் வாக்கு எண்ணிக்கை செயல்முறைகளை விளக்கி பயிற்சி அளித்தார். இந்த பயிற்சி முகாமில் சென்னை மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம் என்பன உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க: வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தீவிரம்.. மே 2ல் தமிழகம் வரும் வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள்!!

வாக்குகள் எண்ணுவது குறித்து பயிற்சி

இந்த பயிற்சி வகுப்பில் வாக்கு எண்ணிக்கை செயல்பாட்டை தொடங்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், வேட்பாளர்களின் முகவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தபால் வாக்குகள், ராணுவ வீரர்கள் வாக்குகள், வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள வாக்குகளை எப்படி எண்ண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அத்துடன் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் பலர் பங்கேற்பு

தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிவஞானம், ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஸ்ரீதர், மனு வேல்ராஜ் ஆகியோர் தலைமையில் இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ஏராளமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி இருந்தனர். அதன்படி, இந்த தேர்தலில் 85.69 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இது கடந்த தேர்தல்களை விட அதிகமான வாக்கு சதவீதம் ஆகும். மே 4- ஆம் தேதி எந்த கட்சியை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது தெரிய வரும்.

மேலும் படிக்க: “சாதி வெறியால் சீரழியும் இளைஞர்களின் வாழ்க்கை”.. புதுக்கோட்டை ஹரிஹரன் மரணத்திற்கு செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்!

Follow Us