AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாக்கு எண்ணிக்கை: லீவ் கிடையாது – காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவு

சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2, 2026 முதல் மறு உத்தரவு வரும் வரை யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது என காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். முறையான காரணங்களு்காக விடுப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை: லீவ் கிடையாது – காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Apr 2026 08:37 AM IST

சென்னை, ஏப்ரல் 29 : சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2, 2026 முதல் யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது என காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.  தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ் உட்பட்ட மதசார்பற்ற கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக முன்னேற்றக் கழகம், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் சசிகலாவின் அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கட்சி ஆகியவை போட்டியிட்டன.

காவல்துறையினருக்கு விடுமுறை கிடையாது

இதில் விஜய்யின் தமிழக வெற்றிக்க கழகம் புதிததாக களமிறங்கவுள்ளதால் அவர் இந்த தேர்தலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இந்திய அளவில் உருவாகியுள்ளது. அதனால் இந்த தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனயைடுத்து வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 திங்கட் கிழமை நடைபெறவிருக்கிறது.

இதனயைடுத்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2, 2026 அன்று முதல் மறு உத்தரவு வரும் வரை யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது எனவும், மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு என முறையான காரணங்களு்காக விடுப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதிாக  , வாக்கு எண்ணும் பணிகளில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களை ஈடுபடுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் உள்ள ஊரக பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் அடிப்படை தேவைக்கான குடிநீர் மற்றும் தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் தொடங்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் ஆகியவற்றை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது.

அதன் காரணமாகவே வாக்கு எண்ணும் பணிகளில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களை ஈடுபடுத்தக் கூடாது. மேலும், ஊரக வளர்ச்சி திட்ட பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் தலைமை தேர்தல் ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில் மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.  இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 29, 2026 இன்று மாலை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us