“படிக்காவிட்டாலும் அரசு வேலை, 5 இடங்களில் தலைநகரம்”.. சீமானின் புதிய தேர்தல் முழக்கம்..

Tamilnadu Assembly Election: திமுகவுக்கு, மாற்று அதிமுக. கிடையாது. அதுபோல, அதிமுகவுக்கு மாற்று திமுக கிடையாது. இரண்டும் ஒரே கட்சி தான். ஒரே ஏமாற்று வேலையைத்தான் பார்க்கிறார்கள். ஆள் மாறும், ஆட்சி மாறும், ஆனால் ஆட்சி முறை மாறாது. கட்சி மாறும், ஆனால் காட்சி மாறாது.

படிக்காவிட்டாலும் அரசு வேலை, 5 இடங்களில் தலைநகரம்..  சீமானின் புதிய தேர்தல் முழக்கம்..

சீமான்

Published: 

14 Apr 2026 09:34 AM

 IST

Tamilnadu Polls 2026: படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் அரசு வேலை வழங்குவது எப்படி? என்பது பற்றி மதுரை பிரச்சாரத்தில் சீமான் விளக்கினார். மதுரை வடக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, புதூர் பகுதியில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, திமுக ரூ.8,000 டோக்கன் கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறது. ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாயில் இருக்கிறார்கள். இதில் மக்களுக்கு என்ன நல்ல திட்டங்களை கொடுத்து இருக்கிறார்கள். நமக்கு தீமைதான் செய்வார்கள் என தெரிந்தும், உதய சூரியனுக்கும், இரட்டை இலைக்கும் மக்கள் ஓட்டு போடுகிறார்கள். இந்த முறை அதனை மாற்ற வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள்தான் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.

இதையும் படிக்க : தமிழகம் வர மறுக்கும் ராகுல் காந்தி… பிரசாரத்தை புறக்கணிக்க முடிவு? இண்டி கூட்டணியில் வெடிக்கும் யுத்தம்!

ஆட்சி மாறும், காட்சி மாறாது:

திமுகவுக்கு, மாற்று அதிமுக. கிடையாது. அதுபோல, அதிமுகவுக்கு மாற்று திமுக கிடையாது. இரண்டும் ஒரே கட்சி தான். ஒரே ஏமாற்று வேலையைத்தான் பார்க்கிறார்கள். ஆள் மாறும், ஆட்சி மாறும், ஆனால் ஆட்சி முறை மாறாது. கட்சி மாறும், ஆனால் காட்சி மாறாது. எனவே, இந்த முறை ஆட்சி முறையில் மாற்றம் வர நாம் தமிழர் ஆட்சிக்கு வர வேண்டும். சகித்து வாழ மக்கள் பழகிவிட்டார்கள். அதுமட்டும்தான் மாற்றமாக இருக்கிறது. ஓட்டுக்கு காசு கொடுக்கிறார்கள், ஏன் காசு கொடுக்கிறார்கள் என மக்கள் இதுவரை கேள்வி கேட்கவில்லை. இந்த தேர்தலில் கேட்க வேண்டும்.

படிக்காவிட்டாலும் அரசு வேலை:

இலவசத்தை கொடுத்து நம் வாக்குகளை வாங்குகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாத ஒரு கூட்டமாக நாம் இருக்கிறோம். கடந்த காலங்களில் ரூ.5, ரூ.10, ரூ.100, ரூ.500, ரூ.1000, ரூ.2 ஆயிரம் என ஓட்டுக்கு பணம் வாங்குவதில்தான் வளர்ச்சி அடைந்திருக்கிறோம். வருங்காலத்தில் திருடுவதற்காக முன்பணமாக ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி ஆட்சியில், படித்தாலும், படிக்காவிட்டாலும் அரசு வேலை வழங்குவேன். பட்டுப்பூச்சி, கழுதை, பன்றி, தேனி, எருமை போன்றவற்றை வளர்ப்பேன்.

இதையும் படிக்க: “தமிழக அரசின் கடன் சுமை ரூ.10.71 லட்சம் கோடியாக உயர்வு”.. வெள்ளை அறிக்கை கேட்கும் சரத்குமார்!!

5 இடத்தில் தலைநகர்:

வாழை, தென்னை, மூங்கில், ஆமணக்கு செடி போன்றவற்றை வளர்த்து அதன் மூலம் தொழிற்சாலைகள் உருவாக்கி, வேலைவாய்ப்பை உருவாக்குவோம். நீங்கள் வாழும் இடத்திலேயே, அரசு வேலை கொடுப்பேன். தலைநகரை மாற்றுவோம், தமிழகத்தை மாற்றுவோம் என்பதே எங்கள் தத்துவம். ஒரு இடத்தில் தலைநகர் இருப்பதை போல், 5 இடத்தில் தலைநகர் உருவாக்குவோம். எனவே, வருகிற தேர்தலில் மக்கள் சிந்தித்து புதியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?