AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: 8 ஆண்டுகால சாதனை.. ஆர்சிபிக்கு சாதகமான சூழ்நிலை.. மாற்றியமைக்குமா ஜிடி?

RCB vs GT IPL 2026 Final: 2026 ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சிறந்த அணியாக உருவெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு 14 லீக் போட்டிகளில் 9ல் வெற்றி பெற்று, மீதமுள்ள 5ல் தோல்வியடைந்தது. இந்த செயல்பாடு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளி அட்டவணையில் முதலிடம் பிடிக்க உதவியது. 2ம் இடத்தில் இருந்த குஜராத்தும் 9 போட்டிகளில் வெற்றி பெற்று 18 புள்ளிகளைப் பெற்றது.

IPL 2026: 8 ஆண்டுகால சாதனை.. ஆர்சிபிக்கு சாதகமான சூழ்நிலை.. மாற்றியமைக்குமா ஜிடி?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 May 2026 16:29 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 மே 31ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்று பல ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர். இதற்கிடையில், பெங்களூருவின் இரண்டாவது கோப்பையை கிட்டத்தட்ட உறுதிசெய்யும் ஒரு சாதனை ஒன்று உள்ளது. இந்த சாதனையைப் பற்றி அறிய, கடந்த 8 ஆண்டுகால சாதனையை தெரிந்து கொள்வது முக்கியம். கடந்த 2018 முதல் 2025 வரையிலான 8 ஆண்டுகளில், முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற அணியே பட்டத்தையும் வென்றது என்பதே சாதனையாகும். எனவே, இந்த சீசனிலும் பெங்களூரு சாம்பியன் ஆவது உறுதியாகத் தெரிகிறது.

ரஜத் பதிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஐபிஎல் 2026 சீசனின் முதல் தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இப்போது, ​​பெங்களூரு அணி இறுதிப் போட்டியிலும் குஜராத்தை எதிர்கொள்ளும்.

ALSO READ: சாம்பியன் பட்டம் யாருக்கு..? பைனலில் இன்று மோதும் குஜராத் – பெங்களூரு!

கடந்த 7 ஆண்டுகளின் பதிவான சாதனை விவரம்:

  • ஐபிஎல் 2018 – சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியாளர் (தகுதிச்சுற்று 1-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியது)
  • ஐபிஎல் 2019 – மும்பை இந்தியன்ஸ் வெற்றியாளர் (தகுதிச்சுற்று 1-ல் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது)
  • ஐபிஎல் 2020 – மும்பை இந்தியன்ஸ் வெற்றியாளர் (தகுதிச்சுற்று 1-ல் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது)
  • ஐபிஎல் 2021 – சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியாளர் (தகுதிச்சுற்று 1-ல் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது)
  • ஐபிஎல் 2022 – குஜராத் டைட்டன்ஸ் வெற்றியாளர் (தகுதிச்சுற்று 1-ல் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது)
  • ஐபிஎல் 2023 – சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியாளர் (தகுதிச்சுற்று 1-ல் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது)
  • ஐபிஎல் 2024 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றியாளர் (தகுதிச்சுற்று 1-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியது)
  • ஐபிஎல் 2025 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றியாளர் (தகுதிச்சுற்று 1-ல் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது)

ALSO READ: பைனலில் களமிறங்கும் RCB – GT! அகமதாபாத் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமா?

2026ம் ஆண்டு சீசனில் சிறந்த பார்மில் ஆர்சிபி:

2026 ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சிறந்த அணியாக உருவெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு 14 லீக் போட்டிகளில் 9ல் வெற்றி பெற்று, மீதமுள்ள 5ல் தோல்வியடைந்தது. இந்த செயல்பாடு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளி அட்டவணையில் முதலிடம் பிடிக்க உதவியது. 2ம் இடத்தில் இருந்த குஜராத்தும் 9 போட்டிகளில் வெற்றி பெற்று 18 புள்ளிகளைப் பெற்றது. ஆனால் சிறந்த நிகர ரன் ரேட்டின் காரணமாக பெங்களூரு முதலிடத்தில் நீடித்தது. பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு குவாலிஃபையர் 1-ல் குஜராத் டைட்டன்ஸை தோற்கடித்தனர். பெங்களூரு தனது 7 ஆண்டு சாதனையைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

Follow Us