AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக தேர்தல் அறிக்கை.. முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை வெளியிடுகிறார்!!

Tamilnadu assembly election: முதலில் மெகா கூட்டணி. தற்போது மெகா, மெகா கூட்டணி அமைந்துள்ளதாக கூறிய அவர், திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று மாலை இதே இடத்தில் வெளியிடப்படும் என்றார். தொடர்ந்து, தான் 31ம் தேதி பிரச்சாரம் தொடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கை.. முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை வெளியிடுகிறார்!!
முதல்வர் ஸ்டாலின்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 29 Mar 2026 09:15 AM IST

Tamilnadu polls 2026: தேர்தலின் கதாநாயகன் என்று சொல்லப்படும் தேர்தல் அறிக்கையை திமுக இன்று மாலை வெளியிட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, நான் பல முறை சொன்னது போன்று, அரசியல் கூட்டணி மட்டுமல்ல, கொள்கை கூட்டணி. கூட்டணி எண்ணிக்கையில் தொகுதிகளைப் பகிர்ந்து கொண்டது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் 164 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். 70 தொகுதிகளைத் தோழமை கட்சிகளோடு பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: பெரம்பூரில் பரப்புரை மேற்கொள்ள விஜய்க்கு அனுமதி – தவெக திட்டம் இதுதான்

உதயசூரியன் சின்னம்:

தோழமைக்கு ஒதுக்கிய தொகுதிகளுள் 11 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னமும், 59 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் சின்னத்திலும் போட்டியிடுகிறோம். 164 திமுக வேட்பாளர்களில் மகளிர் 18 பேர், பட்டம் படித்தவர்கள் 125, முனைவர் 7 பேர், மருத்துவர்கள் 15 பேர், சட்டம் படித்தவர்கள் 29, பொறியியல் படித்தவர்கள் 17, புதுமுக வேட்பாளர்கள் 60-க்கும் மேற்பட்டவர்கள் களம் காண்கிறார்கள். திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதில் இவர்கள் வேட்பாளர்கள் மட்டுமல்ல, வெற்றி வேட்பாளர்கள். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும். இது உறுதி என்றார்.

அனைவரையும் திருப்தி செய்துள்ளோம்:

வேட்பாளர் பட்டியலை அதிமுக முன்பே அறிவித்துவிட்டது, தி.மு.க. இன்னும் அறிவிக்கவில்லையே என்று கேட்டார்கள். நாங்கள் தொகுதியை ‘கேட்பதற்கு’ வந்தோம். ஆனால் ‘கேட்பதற்கு’ வந்திருக்கிறோம். ஏனென்றால் பல கூட்டணி கட்சிகள் இருந்தது. அனைத்துக் கட்சிகளுடனும் அமர்ந்து பொறுமையாக, அவர்கள் கேட்பது, நாங்கள் சொல்வது, மற்ற கட்சிகள் கேட்பது என்றெல்லாம் இருந்தது. அவை அனைத்தையும் சரி செய்து, அனைவரையும் திருப்தி செய்து, அனைவரும் திருப்தியாக ஒப்புக்கொண்டு, அதன்பிறகு கையெழுத்திடப்பட்டு, அந்த அடிப்படையில்தான் செய்திருக்கிறோம் தவிர, வேறு ஒன்றும் இல்லை. காலம் தாழ்த்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மெகா மெகா கூட்டணி:

முதலில் மெகா கூட்டணி. தற்போது மெகா, மெகா கூட்டணி அமைந்துள்ளதாக கூறிய அவர், திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று மாலை இதே இடத்தில் வெளியிடப்படும் என்றார். தொடர்ந்து, தான் 31ம் தேதி பிரச்சாரம் தொடங்குவதாகவும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்கள். அடுத்து கலந்து பேசி பிரச்சாரம் தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் படிக்க: திருச்சியில் ஏப்ரல் 3 முதல் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு..

அண்ணாவை நினைவுகூர்ந்த ஸ்டாலின்:

மேலும், திமுகவில் விருப்ப மனு அளித்தவர்களில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு தான் கூறிக்கொள்வது ஒன்றுதான், அண்ணா அடிக்கடி சொல்லியிருக்கிறார். ஒரு திருமணத்திற்குப் போகும் போது ஒரு பட்டுப்புடவையைத் தான் கட்டிவிட்டுப் போகமுடியும். பீரோவில் இருக்கிற அனைத்து பட்டுப்புடவையையும் கட்டிவிட்டுப் போக முடியாது. அடுத்த திருமணத்திற்குச் செல்லும் போது அடுத்த பட்டுப்புடவையைக் கட்டிவிட்டுச் செல்ல வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார். அதைத் தான் நான் சொல்கிறேன் என்று தெரிவித்தார்.

Follow Us