AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மு.க.ஸ்டாலின் முதல் சீமான் வரை.. முதல் அமைச்சர் வேட்பாளர்கள் வெற்றி நிலவரம் என்ன!

CM Candidate victory Details : தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாதக ஆகிய கட்சிகள் சார்பில் முதல் அமைச்சர் வேட்டபாளர்களாக போட்டியிட்டவர்களின் வெற்றி நிலவரம், அவர்கள் பெற்ற வாக்குகள் உள்ளிட்ட முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மு.க.ஸ்டாலின் முதல் சீமான் வரை.. முதல் அமைச்சர் வேட்பாளர்கள் வெற்றி நிலவரம் என்ன!
முதல் அமைச்சர் வேட்பாளர்கள் வெற்றி நிலவரம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 04 May 2026 18:33 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி சார்பில் மு. க. ஸ்டாலின், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் ஆகியோர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தனர். அதன்படி, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 4 முனை போட்டியுடன் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் அதிக அளவிலான வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். அவ்வாறு பதிவு செய்யப்பட்டிருந்த வாக்குகள் எண்ணும் பணி தமிழக முழுவதும் 62 மையங்களில் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆரம்பம் முதலில் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்படி, வாக்கு எண்ணிக்கையில் முதல் முதலாக 100 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் முதல் கட்சியாக முன்னிலை வகித்தது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

இதைத் தொடர்ந்து, நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை சுற்றுகளில் தமிழக வெற்றி கழகம் முன்னிலையை விடாமல் இருந்து வந்தது. அதன்படி, தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளரான ஜோஸ் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளார். இதில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 1,12,279 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதே போல திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 79,762 வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்தார்.

முக்கிய வேட்பாளர்களின் நிலை என்ன?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் 72,988 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி. எஸ். பாபு 82,110 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதே போல, எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட எடப்பாடி கே. பழனிசாமி 1,40,729 வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்தார். இவரை எதிர்த்துப் தவெக ஆதரவுடன் போட்டியிட்ட பிரேம்குமார் தோல்வியை தழுவினார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளராக காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 27, 214 வாக்குகள் மட்டுமே பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் டி. கே. பிரபு 91,361 வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்தார். தற்போது, முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட 4 பேரில் எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜய் ஆகிய இருவர் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us