AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதலில் தபால் வாக்குகள் – வாக்கு எண்ணும் வழிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

Tamil Nadu Polls : வருகிற மே 4, 2026 அன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும் வாக்கு எண்ணும் வழிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதலில் தபால் வாக்குகள் – வாக்கு எண்ணும் வழிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 27 Apr 2026 17:33 PM IST

சென்னை, ஏப்ரல் 27 : வருகிற மே 4, 2026 அன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும் வாக்கு எண்ணும் வழிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும், தமிழக தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மே 4 ஆம் தேதி காலை 8.00 மணிக்கு 62 மையங்களில் தொடங்குகின்றது.  முதலில் தபால் வாக்குகள், பின்னர் 8.30 மணியளவில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

வாக்கு எண்ணும் வழிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

வாக்கு எண்ணும் மையத்தின் ஒரு பகுதியில் தபால் வாக்குகள், மற்றொரு பகுதியில் ஈவிஎம் வாக்குகள் எண்ணப்படும் எனவும்  500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : 2 மணி நேரம் கேமரா இணைப்பு கட்.. பின்னோக்கி சென்ற வீடியோ காட்சிகள்.. வாக்குப்பதிவு இயந்திர அறையில் பரபரப்பு!

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 4, 2026 அன்று திங்கட்கிழமை அன்று 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

வாக்குகள் எண்ணும் வழிமுறைகள்

வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்குத் துவங்கும். முதலில் காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கும். 30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன்தான் துவங்கப்படும்.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் அதற்குரிய மேசைகளில் எண்ணப்படும். இரண்டிற்கும் தனித்தனியாக மேற்பார்வைக்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அளவில் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.

இதையும் படிக்க : தமிழகத் தேர்தல் 2026.. மறுவாக்குப்பதிவு அவசியமில்லை.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மொத்த 3.60 லட்சம் அலுவலர்களில், வாக்காளர்களாக பதிவு செய்து, வாக்களிக்க விண்ணப்பித்த 2.88 இலட்சம் அலுவலர்கள் தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இத்துடன் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட காவல்துறை சார்ந்த அலுவலர்களும். மற்ற தேர்தலில் பணிபுரிந்த அலுவலர்கள். தேர்தல் கண்காணிப்பு குழுக்களில் பணியாற்றிய அலுவலர்களும் சேர்த்து மொத்தம் 3.36 லட்சம் தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகளாகவும், 1.10 இலட்சம் அலுவலர்கள் தேர்தல் பணி சான்றிதழ் பெற்று நேரடியாக வாக்குச்சாவடியிலும், வாக்களித்துள்ளனர்.

மேலும், 85 வயதுக்கு அதிகமான முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அளித்த படிவம் 12 D விண்ணப்பத்தின் பெயரில், மொத்தம் 1.73 லட்சம் வாக்காளர்கள் தபால் வாக்கு பெற்று வாக்களித்துள்ளனர். இதுவரை சேவை வாக்காளர்கள்18,000 நபர்கள் வாக்களித்துள்ளனர். இவர்களின் தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4, 2026 அன்று காலை 8:00 வரை பெறப்படும்.

Follow Us