AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத் தேர்தல் களம்.. 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்த வாக்கு உயர்வு விகிதம்..

Tamilnadu Assembly Election: தற்போதைய தேர்தலில் சுமார் 25 லட்சம் பேர் மட்டுமே கூடுதலாகத் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். 85 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு நடந்திருந்தாலும், புதிய வாக்காளர்களின் பங்களிப்பு மற்றும் வாக்காளர் எண்ணிக்கையின் வளர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருப்பது அரசியல் ஆய்வாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத் தேர்தல் களம்.. 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்த வாக்கு உயர்வு விகிதம்..
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 26 Apr 2026 08:07 AM IST

Tamilnadu Polls 2026: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், 2026-ம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் 85.15% ஆக உயர்ந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் தொடர் விழிப்புணர்வு மற்றும் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் காரணமாக இந்த உயர்வு எட்டப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்தச் சதவீத உயர்வுக்குப் பின்னால் ஒரு முக்கியமான கவலைக்குரிய புள்ளிவிவரமும் மறைந்துள்ளது. அதாவது, ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருந்தாலும், முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு விகிதம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

இதையும் படிக்க: எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்..

வாக்களிப்போர் எண்ணிக்கை குறைவு:

கடந்த காலத் தேர்தல்களைப் பார்க்கும்போது, 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதற்கு முந்தைய 2001ம் ஆண்டை விட சுமார் 48 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்திருந்தனர். இது 17.24% என்ற அபாரமான வளர்ச்சியாகப் பார்க்கப்பட்டது. அதேபோல், 2011ல் 11.4% மற்றும் 2016ல் 18.5% என வாக்களித்தவர்களின் எண்ணிக்கை விகிதம் ஆரோக்கியமான உயர்வைக் கண்டு வந்தது. ஆனால், 2021-ல் இந்த விகிதம் 6.22% ஆகக் குறைந்த நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலில் அது மேலும் சரிந்து 5.53% என்ற நிலையை எட்டியுள்ளது.

20 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவு:

தற்போதைய தேர்தலில் சுமார் 25 லட்சம் பேர் மட்டுமே கூடுதலாகத் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். 85 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு நடந்திருந்தாலும், புதிய வாக்காளர்களின் பங்களிப்பு மற்றும் வாக்காளர் எண்ணிக்கையின் வளர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருப்பது அரசியல் ஆய்வாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் வாக்களித்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு விகிதம் இப்போதுதான் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது என்பதைப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

வாக்குச்சாவடிக்கு வரும் ஆர்வம் குறைவு:

இதன் மூலம், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் பெரும்பாலோர் வாக்களித்திருந்தாலும், புதிய வாக்காளர்களின் சேர்க்கை அல்லது அவர்கள் வாக்குச்சாவடிக்கு வரும் ஆர்வம் முந்தைய ஆண்டுகளை விடக் குறைந்திருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. வாக்குப்பதிவு சதவீதத்தில் சாதனை படைத்திருந்தாலும், மக்கள் தொகையின் வளர்ச்சிக்கு ஏற்ப வாக்காளர் எண்ணிக்கையின் உயர்வு விகிதம் சரிவடைந்திருப்பது இந்தத் தேர்தலின் ஒரு முக்கிய கவனிக்கத்தக்க அம்சமாக மாறியுள்ளது.

இதையும் படிக்க: தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெண் சக்தி’: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?

வரலாற்று ரீதியான வளர்ச்சி:

கடந்த 25 ஆண்டுகாலத் தரவுகளைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. 1996-ல் 2.71 கோடி வாக்குகளாக இருந்தது, 2001-ல் 2.80 கோடியாக உயர்ந்தது. 2006-ல் அதற்கு முந்தைய தேர்தலை விட 50 லட்சம் வாக்குகள் அதிகரித்தது. 2016 தேர்தலில் மிக அதிகபட்சமாக 64 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பதிவானது. தற்போது பதிவாகியுள்ள 30 லட்சம் கூடுதல் வாக்குகள் என்பது, “இயல்பான வளர்ச்சி” போலவே காட்சியளிக்கிறது. குறிப்பாக, இந்தத் தரவுகளின்படி பார்த்தால், இந்த முறை பதிவான 30 லட்சம் கூடுதல் வாக்குகள் என்பது கடந்த கால சராசரி வளர்ச்சியே தவிர, இது ஒரு அசாதாரணமான உயர்வு அல்ல என்பது தெளிவாகிறது.

Follow Us