AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாஷிங் மெஷின்-டிவி-ப்ரிட்ஜ் வாங்க ரூ.8000 கூப்பன்.. திமுக வாக்குறுதியில் அசத்தல் அறிவிப்பு!

DMK Election Manifesto: மகளிர், முதியோர், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு அசத்தலான அறிவிப்புகள் அடங்கிய திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார். இதில், குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வாஷிங் மெஷின்-டிவி-ப்ரிட்ஜ் வாங்க ரூ.8000 கூப்பன்.. திமுக வாக்குறுதியில் அசத்தல் அறிவிப்பு!
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 29 Mar 2026 19:13 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை ( மார்ச் 29) சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், முதல்வருமான மு. க. ஸ்டாலின் பங்கேற்று தேர்தல் அறிக்கை தயாரித்தவர்களை பாராட்டினார். இதைத் தொடர்ந்து, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை வாசித்து வெளியிட்டார். இதில்,

மேலும் படிக்க: S.Regupathy Tamil Nadu Elections 2026: தேசிய அரசியல் டூ மாநில அரசியல்.. மீண்டும் அமைச்சரவையில் இடம் பிடிப்பாரா எஸ்.ரகுபதி!

  • 1 முதல் 8 வகுப்பு வரை சுமார் 15 லட்சம் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும்.
  • 1.30 கோடி மகளிர்கள் பெற்று வரும் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.
  • 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும்.
  • தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
  • முதல் அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஆண்டு வருமான வரம்பு 5 லட்சம் ரூபாயாகவும், காப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாய் ஆகவும் உயர்த்தப்படும்.
  • உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும்.
  • கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500- ஆக உயர்த்தப்படும்.
  • பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படும்.
  • முதியோர் உதவித்தொகை ரூ. 1,200- இல் இருந்து, ரூ.2000-ஆக உயர்த்தப்படும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1500- இல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்.
  • மீன்பிடி சிறப்பு நிவாரணத் தொகை ரூ.6000 ரூபாயில் இருந்து ரூ.9,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • சுய உதவிக் குழு பெண்கள் தொழில் முனைவராவதற்கு ரூ.5 லட்சம் வரை மானிய வங்கி கடன்.
  • சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்.
  • பேரிடர் கால இழப்பீடாக நெல் பயிருக்கு ரூ.25,000, நீண்டகால பயிர்களுக்கு ரூ.27 ஆயிரம், மானாவாரி பயிர்களுக்கு ரூ. 12000 வழங்கப்படும்.
  • மாவட்டங்கள் முதல் வட்டங்கள் வரையிலான அரசு மருத்துவமனைகளில் டயலாசிஸ் கருவிகள் 2 மடங்காக்கப்படும்.

  • உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு 5 ஆண்டுகளுக்குள் மடிக்கணினி வழங்கப்படும்.
  • 2030- ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • அரசு துறையில் உள்ள 1.50 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.னைத்து மாவட்டங்களிலும் உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய தரம் வாய்ந்த விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும்.
  • அனைத்து மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளில் 50 செம்மொழி பூங்காக்கள் அமைக்கப்படும்.
  • அனைத்து அரசு கல்லூரிகளிலும் வைபை வசதியுடன் கூடிய டிஜிட்டல் கற்றல் மையங்கள் அமைக்கப்படும்.
    வாஷிங் மெஷின், டிவி, கிரைண்டர், மிக்ஸி, மைக்ரோ ஓவன் உள்ளிட்ட பொருட்களை புதிதாக வாங்கவோ அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வரும் பொருள்களுக்கு மாற்றாக வாங்கவோ இல்லத்தரசி என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
  • வீட்டு உபயோக பொருட்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 50 வாக்குறுதிகளை வெளியிட்டார்.

மேலும் படிக்க: தமிழக வெற்றிக் கழகத்தில் 23 பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு… திமுகவைவிட அதிகம்!

Follow Us