AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜெயலலிதாவுக்கு பிறகு… இரு தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் தலைவர் விஜய்… தேர்தல் வியூகம் தான் என்ன!

Tvk Leader Vijay : வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட காரணம் என்ன. இதில், விஜய்யின் தேர்தல் வியூகம் எவ்வாறு வகுக்கப்பட்டுள்ளது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 29 Mar 2026 15:14 PM IST
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட காரணம் என்ன

1 / 5
கடலூரில் விஜய் பரப்புரைக்கு அனுமதி

கடலூரில் விஜய் பரப்புரைக்கு அனுமதி

2 / 5
தற்போது வரை  பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில்  திராவிட முன்னேற்ற கழகம் 9  முறையும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3  முறையும்,  அதிமுக 3  முறையும்,  காங்கிரஸ் கட்சி 1  முறையும் வெற்றி பெற்றுள்ளது.  திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டையாக இருந்து வரும்  இந்த தொகுதியின்  தற்போதைய எம்எல்ஏவாக  ஆர்.டி. சேகர் இருந்து வருகிறார். தற்போது,  வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பில்  ஆர். டி.  சேகர் மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார்.

3 / 5
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும்  பாட்டாளி மக்கள் கட்சி களம் காண்கிறது. சென்னை மாவட்டத்தில்  அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக  பெரம்பூர் சட்டமன்ற தொகுதி விளங்கி வருகிறது.  இதில்,  குறிப்பாக 70  ஆயிரத்துக்கும்  மேற்பட்ட இளைஞர்கள்  உள்ளனர்.  இந்த தொகுதியில்,  தமிழக வெற்றி கழகத்திற்கு 45 ஆயிரம் உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில்,  பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு விஜய் முன் வந்ததாக  கூறப்படுகிறது.

4 / 5
இதே போல, கடந்த 2008- ஆம் ஆண்டு  நடைபெற்ற தொகுதி மறு சீரமைப்புக்கு  பிறகு  திருச்சி கிழக்கு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  இந்த தொகுதியில்  திமுக 6  முறையும்,  அதிமுக 2  முறையும் வெற்றி பெற்றுள்ளது.  தற்போது  திமுக சார்பில்  இனிகோ இருதயராஜும்,  அதிமுக சார்பில்  ராஜசேகரனும் வேட்பாளராக  அறிவிக்கப்பட்டுள்ளனர்.  இந்த தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் இருப்பதால்  இந்த தொகுதியை விஜய் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட போர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தார். அந்த வரிசையில் தவெக தலைவர் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

5 / 5
Follow Us