AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுகவின் அரச பரம்பரைக்கு சட்டமன்ற தேர்தலில் முற்றுப்புள்ளி… சபதம் ஏற்ற எடப்பாடி பழனிசாமி!

Edappadi K Palaniswami: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரச பரம்பரைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் தொடங்கிப்படும் என்றார்.

திமுகவின் அரச பரம்பரைக்கு சட்டமன்ற தேர்தலில் முற்றுப்புள்ளி… சபதம் ஏற்ற எடப்பாடி பழனிசாமி!
குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது நிச்சயம் - எடப்பாடி பழனிசாமி..
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 29 Mar 2026 18:05 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்தை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று ஞாயிற்றுக்கிழமை ( மார்ச் 29) பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: ஒக்கி புயல் பாதிப்பின் போது, மீனவர்களின் வாழ்வாதாரத்துக்காக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2500 வழங்கப்பட்டது. இதில், சேதமடைந்த வீடுகள் மற்றும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. கச்சத்தீவை காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தாரை வார்த்துள்ளது. இதனை மீட்டெடுப்பதற்கு மத்திய அரசை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தும். தமிழகத்தில் உயர் கல்வியில் படித்த மாணவர்கள் அதிகம் உள்ள மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டமாகும். அதிமுக ஆட்சியில் 2 இடங்களில் கல்லூரிகள் அமைக்கப்பட்டது. 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் 68 கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சிக் காலத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள்

இதே போல, பள்ளிகளின் தரமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்வி கற்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கியது. 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 6 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. தற்போதைய திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட அமைக்கப்படவில்லை. இந்த திராணியற்ற அரசாங்கம் மீண்டும் தொடர வேண்டுமா.

மேலும் படிக்க: “2 தொகுதிகளில் போட்டியிடுகிறார் விஜய்”.. தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

அதிமுக ஆட்சிக்காலத்தில் இலவச மடிக்கணினி திட்டம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவிலான கால்நடை பூங்கா சேலம் மாவட்டம், தலைவாசலில் தொடங்கப்பட்டது. ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிலும் முட்டுக்கட்டை போட்டு உள்ளனர். அதிமுக ஆட்சியில் பால் உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கையை எடுக்கப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. ஆனால், அந்தத் திட்டத்தையும் திமுக அரசு தடுத்து நிறுத்தியது.

52.32 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

10 ஆண்டுகளில் 52 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. இதற்காக ரூ.7,350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்த காரணத்தால் அவசர அவசரமாக கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியை திமுக அரசு வழங்கியுள்ளது. இந்த மடிக்கணினிகளும் தரமற்றதாக இருந்ததாக கேள்விப்பட்டேன். இதில் நடந்த ஊழல் குறித்து அதிமுக ஆட்சியில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். அதிமுக ஆட்சியில் மீண்டும் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும்.

திமுக அரச பரம்பரைக்கு முற்றுப்புள்ளி

வருகின்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறப்போவது உறுதி இல்லை. அதையும் மீறி வெற்றி பெற்றால், தமிழகத்தின் முதல்வராக உதயநிதி ஸ்டாலினை அமர்த்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த குடும்ப ஆட்சி, மன்னர் ஆட்சியை இந்த தேர்தல் முடிவுகள் முடிவு கட்டும். அரச பரம்பரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமையும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: Salem North Constituency Election 2026: அரசியல் ரீதியாக மாறுபடும் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி.. வேட்பாளர்களின் விவரம் இதோ..

Follow Us