AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“2 தொகுதிகளில் போட்டியிடுகிறார் விஜய்”.. தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

Tamilnadu Assembly election: சட்டமன்றத் தேர்தலில் தான் 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அதன்படி, பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் அவர் போட்டியிடுகிறார். தி.நகர் தொகுதியில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா, கோபி தொகுதியில் செங்கோட்டையன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

“2 தொகுதிகளில் போட்டியிடுகிறார் விஜய்”.. தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!
விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 29 Mar 2026 12:51 PM IST

Tamilnadu Polls 2026: சட்டமன்றத் தேர்தலில் தான் 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்தார். இதற்கான அறிமுக விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.  அப்போது, வேட்பாளர்களை அறிவித்த தவெக தலைவர் விஜய், தான்  பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் களம் காண்பதாக அறிவித்தார்.  தொடர்ந்து, தி.நகர் தொகுதியில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா, கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் செங்கோட்டையன், திருப்பரங்குன்றத்தில் சி.டி.ஆர்.நிர்மல்குமார், திருத்தனியில் சத்யகுமார், திருச்செங்கோட்டில் அருண் ராஜ், எழும்பூரில் ராஜ்மோகன் ஆகியோர் போட்டியிடுவதாக விஜய் அறிவித்தார்.

இதையும் படிக்க: “ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க”.. உங்களை நம்பியே களத்தில் இறங்குகிறோம்.. விஜய் உருக்கமாக பேச்சு!!

தவெக வேட்பாளர்கள் பட்டியல்:

  • பெரம்பூர்  – சி.ஜோசப் விஜய்
    திருச்சி கிழக்கு – சி.ஜோசப் விஜய்
  • தி. நகர் – என்.ஆனந்த்
  • வில்லிவாக்கம் – ஆதவ் அர்ஜுனா
  • கோபிச்செட்டிபாளையம்  – செங்கோட்டையன்
  • திருச்செங்கோடு – அருண்ராஜ்
  • திருப்பரங்குன்றம் – நிர்மல் குமார்
  • குமாரபாளையம் – விஜயலட்சுமி
  • திட்டக்குடி – ராஜசேகர்
  • சைதாப்பேட்டை – அருள் பிரகாசம்
  • வால்பாறை – ஸ்ரீதரன்
  • எழும்பூர் – ராஜ்மோகன்
  • லால்குடி – கு.பா.கிருஷ்ணன்
  • திருப்பர் வடக்கு – சத்யபாமா
  • ஆயிரம் விளக்கு – ஜேடிசி பிரபாகர்
  • ஆர்.கே.நகர் – மரியவிலசன்
  • ஆவடி – ஆர்.ரமேஷ்
  • மதுரவாயல் – ரெவந்த் சரண்
  • திரு.வி.க நகர் – பல்லவி
  • ராயபுரம் – விஜய் தாமு
  • துறைமுகம் – சினோரா பி.அசோக்
  • சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி – செல்வம்
  • அண்ணா நகர் – வி.கே.ராம் குமார்
  • விருகம்பாக்கம் – சபரி நாதன்
  • வேளச்சேரி – ஆர்.குமார்
  • சோழிங்கநல்லூர்- ஈசிஆர் சரணவன்
  • தாம்பரம் – கில்லி சரத்
  • செங்கல்பட்டு – தியாகராஜன்
  • தருமபுரி – எம்.சிவன்
  • திருப்போரூர் – விஜய் ராஜ்
  • அரூர் – ராகேஷ்
  • திருக்கோவிலூர் – பரணிபாலாஜி
  • உளுந்தூர்பேட்டை – சுதாகர்
  • ரிஷிவந்தியம் அசோக் குமார்
  • சங்கராபுரம் – ஜெகதீச பாண்டியன்
  • ஆத்தூர் – செல்வபாரதி
  • ஏற்காடு – ஜெ.லட்சுமி
  • பாப்பிரெட்டிபட்டி – திலகவதி
  • தாராபுரம் – கௌரி சித்ரா
  • அந்தியூர் – வெங்கடேஷ்
  • திருப்பூர் – பாலமுருகன்
  • பல்லடம் – கே.ராம்குமார்
  • சூலூர் – சுகுமார்
  • கவுண்டம்பாளையம் – கனிமொழி
  • கோவை வடக்கு – சம்பத் குமார்
  • தொண்டாமுத்தூர் – சதீஷ்
  • கோவை தெற்கு – செந்தில் குமார்
  • சிங்காநல்லூர் – ஸ்ரீ கிரி பிரசாத்

Follow Us