இனி சுலபமாக ஜிமெயில் ஐடியை மாற்றம் செய்யலாம்.. கூகுள் வெளியிட்ட அசத்தல் அம்சம்!

Users Now Can Easily Change Their Gmail Id | உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் கூகுளின் ஜிமெயில் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், பயனர்களின் வசதிக்காக ஜிமெயில் ஐடியை மாற்றம் செய்யும் அசத்தல் அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

இனி சுலபமாக ஜிமெயில் ஐடியை மாற்றம் செய்யலாம்.. கூகுள் வெளியிட்ட அசத்தல் அம்சம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

01 Apr 2026 19:28 PM

 IST

கூகுள் (Google) நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail), டிரைவ் (Drive), மேப்ஸ் (Maps) உள்ளிட்ட செயலிகளை உலக அளவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இவற்றில் அதிக மக்களால் பயன்படுத்தும் அம்சமாக கூகுளின் ஜிமெயில் செயலி உள்ளது. பள்ளி கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் பரவலாக பயன்படுத்தப்படும் செயலியாக இது உள்ளது. இந்த நிலையில், பயனர்கள் நீண்ட காலமாக எதிர்ப்பார்த்து காத்திருந்த அம்சம் குறித்து கூகுள் தற்போது அறிவித்துள்ளது. அது என்ன அம்சம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பயனர்கள் ஜிமெயில் ஐடியை மாற்றிக்கொள்ளலாம் – கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் செயலியை ஏராளமானவர்கள் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஜிமெயிலில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜிமெயில் ஐடி வழங்கப்படும். மற்ற சமூக ஊடக கணக்குகளில் பெயரை மாற்றுவதை போல ஜிமெயில் ஐடியை மாற்றம் செய்ய முடியாது. அதனை மாற்றம் செய்வதற்கான அம்சத்தை கூகுள் வெளியிட வேண்டும் என பயனர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில், பயனர்களின் பல ஆண்டு கால கோரிக்கையை கூகுள் தற்போது நிறைவேற்றியுள்ளது.

இதையும் படிங்க : அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ரெட்மி 15ஏ.. அதுவும் பட்ஜெட் விலையில்!

அதாவது ஜிமெயில் செயலிக்காக ஜிமெயில் ஐடியை மாற்றம் செய்வதற்கான அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தில் பயனர்களால் @gmail.com என்பதற்கு முன்னால் உள்ள தங்களது பெயர் அல்லது அவர்கள் எந்த வார்த்தையை பயன்படுத்தி ஐடியை உருவாக்கியுள்ளார்களோ அதனை மாற்றம் செய்துக்கொள்ள முடியும். முன்னதாக ஜிமெயில் ஐடியை மாற்ற வேண்டும் என்றால் பயனர்கள் புதிய ஐடியை திறக்க வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், தற்போது கூகுள் அதனை மிகவும் சுலபமானதாக மாற்றியுள்ளது.

கணக்கு மற்றும் தரவுகளில் எந்த மாற்றமும் ஏற்படாது

இந்த புதிய அம்சத்தின் மூலம் உங்கள் கணக்கில் எந்த வித மாற்றமும் ஏற்படாமல் உங்களால் ஐடியை மாற்றம் செய்துக்கொள்ள முடியும்.

  • ஜிமெயில்கள், கூகுள் டிரைவ் ஃபைல்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை பாதுகாப்பாக இருக்கும்.
  • ஜிமெயில் உடன் இணைகப்பட்ட சர்வீஸ்கள் மற்றும் கணக்கு செட்டிங்ஸ் அனைத்தும் அப்படியே இருக்கும்.
  • பயனர்கள் தங்களது ஜிமெயில் ஐடியை மாற்றம் செய்ய புதிய கணக்கு தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.

இதையும் படிங்க : வீட்டில் இந்த பிரச்னை இருக்கா? உங்கள் WiFi Router மாற்ற வேண்டிய நேரம் இதுதான்

ஜிமெயில் ஐடியை மாற்றம் செய்வதற்கு பயனர்கள் குழம்பி வந்த நிலையில், தற்போது எந்த வித சிக்கலும் இல்லாமல் ஜிமெயில் ஐடியை மாற்றம் செய்துக்கொள்வதற்கான அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..