AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிமுக – பாஜக கூட்டணியில் இணையும் தவெக?.. திமுகவின் மெகா கூட்டணியால் மாறும் எதிர்கட்சிகளின் வியூகம்..

Will TVK join in AIADMK and BJP alliance: இளைஞர்களைக் கவரும் வகையில் தவெகவின் பிரசாரம் அமைந்துள்ளதால், தேர்தல் முடிவுகளில் விஜய் ஒரு முக்கிய காரணியாக இருப்பார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சியை திமுக தக்கவைத்துக்கொண்டது விஜய்க்கு ஒரு சிறிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

அதிமுக – பாஜக கூட்டணியில் இணையும் தவெக?.. திமுகவின் மெகா கூட்டணியால் மாறும் எதிர்கட்சிகளின் வியூகம்..
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 08 Mar 2026 13:09 PM IST

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம், எப்போதும் எதிர்பார்ப்புகளுக்குப் பஞ்சமில்லாத ஒன்று. “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை” என்ற பழமொழிக்கு ஏற்ப, 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இதுவரை கண்டிராத பல அதிரடி திருப்பங்களுடன் முன்னெறியப்பட்டு வருகிறது. தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத வகையில், ஆளுங்கட்சியான திமுக இந்த முறை ஒரு ‘மெகா கூட்டணியை’ கட்டமைத்துள்ளது. சுமார் 26 கட்சிகளை உள்ளடக்கிய இந்த வலுவான கூட்டணியுடன், 100க்கும் மேற்பட்ட இயக்கங்கள் மற்றும் சங்கங்களின் ஆதரவையும் திமுக பெற்றுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையைத் தீவிரமாக எதிர்கொள்ளும் விதமாக, திமுக தனது தேர்தல் வியூகங்களை மிக நுணுக்கமாக வகுத்து வருகிறது. வலுவான கூட்டணி ஒருபுறமிருக்க, மறுபுறம் அரசின் நலத்திட்டங்கள் மூலமும், குறிப்பாகப் பெண்களைக் கவரும் புதிய அறிவிப்புகள் மூலமும் தனது வாக்கு வங்கியைத் தக்கவைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதையும் படிக்க: “அதிமுகவில் பழிவாங்கப்பட்டேன்”.. திமுகவில் இணைந்தது ஏன்? ஓபிஎஸ் பரபரப்பு விளக்கம்..

அதிமுக – பாஜக இணைப்பு முயற்சியில் சிக்கல்?

திமுகவின் படை பலத்தை முறியடிக்க வேண்டும் என்றால், அதற்கு இணையான கூட்டணி தேவை என்பதை அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக மற்றும் தமாகா போன்ற கட்சிகள் இருந்தாலும், திமுகவை வீழ்த்த இது போதாது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. இதனால்தான் கூட்டணியை மேலும் பலப்படுத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு முயற்சி செய்தாலும், அதில் பெரிய அளவிலான வெற்றி கிடைக்கவில்லை.

தவெகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை:

எனினும், திமுகவை வீழ்த்த ஒரே வழி அதிமுக, பாஜக மற்றும் தவெக ஆகிய மூன்று சக்திகளும் ஒன்றிணைவதுதான் என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் வலுத்துள்ளது. இதற்கான முயற்சியாக, தவெகவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தரப்பில் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், இதில் 70 சதவீதம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன.

விஜய்யின் அரசியல் நகர்வுகள்:

ஆரம்பத்தில் திமுக மற்றும் பாஜக ஆகிய இரு தேசிய/மாநில ஆளுங்கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்த விஜய், சமீபத்திய பிரசாரங்களில் அதிமுகவையும் தனது விமர்சன வளையத்திற்குள் கொண்டு வந்தார். ஆனால், மிக சமீபத்திய கூட்டங்களில் பாஜக குறித்த விமர்சனங்களைத் தவிர்த்து, திமுக மற்றும் அதிமுகவை மட்டுமே குறிவைத்துப் பேசியது அரசியல் கவனிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது ஒரு புதிய கூட்டணிக்கு வழிவகுக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களைக் கவரும் வகையில் தவெகவின் பிரசாரம் அமைந்துள்ளதால், தேர்தல் முடிவுகளில் விஜய் ஒரு முக்கிய காரணியாக இருப்பார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சியை திமுக தக்கவைத்துக்கொண்டது விஜய்க்கு ஒரு சிறிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : தமிழகத்தில் இருந்து விடைபெறும் ஆளுநர் ரவி.. நேரில் சந்தித்து பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்..

புதுமையான தேர்தல் களம்:

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு சதவீதம், தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை தந்தது. அதே உத்வேகத்துடன் சட்டமன்றத் தேர்தலை பாஜக அணுகி வருகிறது. இத்தகைய சூழலில், அதிமுக, பாஜக, தவெக ஆகிய கட்சிகள் ஒரே அணியில் இணைந்தால், அது திமுக கூட்டணிக்குக் கடும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியிருப்பினும், 2026 சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு ‘புதுமையான திருப்புமுனையாக’ இருக்கும் என்பது மட்டும் உறுதி என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Follow Us