AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இது தான் மாற்றமா? பேரவை விவாத வீடியோ ‘எடிட்’ மிகப் பெரிய தவறு – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஆளுநர் உரை மீதான விவாதங்கள் தொடங்கிய நிலையில், அவை இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படவில்லை. இது இன்றைய ஆளுங்கட்சி கொடுத்த வாக்குறுதிக்கு மாறானது என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தான் மாற்றமா? பேரவை விவாத வீடியோ ‘எடிட்’ மிகப் பெரிய தவறு –  உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
உதயநிதி ஸ்டாலின் - முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Jun 2026 15:38 PM IST

சென்னை, ஜூன் 20 : சட்டமன்றத்தில் கேள்வி பதில் பகுதியின் போது நேரலை நிறுத்தப்பட்டது குறித்து எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித் துறை தமிழ்வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், நேரலை தொடர்கிறது என்ற நம்பிக்கையில் தான் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். வெளியே வந்தபோது தான் நேரலை நிறுத்தப்பட்டதாக சொன்னார்கள். பேரவை நிகழ்வுகள் நேரலை செய்ய வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி, மிச்சமிருக்கும் நாட்களில் நேரலை செய்யப்படும் என்றார்.

‘பேரவை விவாத வீடியோ ‘எடிட்’ மிகப் பெரிய தவறு’

இந்த நிலையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று முதல்வர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது நடைபெற்று வரும் ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படுவதில்லை என்பதைத் தங்களது மேலான கவனத்துக்கு கொண்டுவருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : அரசுப் பள்ளியில் தவெகவினர் ரீல்ஸ்… மாணவர்கள் கல்வியை பாதிக்கும் செயலை ஏற்க முடியாது.. அண்ணாமலை கண்டனம்!

மேலும், “கொடுத்த வாக்கைக் காப்பாற்றியுள்ளார் முதல்வர். இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கியிருக்கிறது. இனி சட்டப்பேரவை நேரலை தொடரும். இது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான நிர்வாகத்திற்கு இன்றைய நிகழ்வு மிகப்பெரிய எடுத்துக்காட்டு” என அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டுச் சொன்ன அன்றே நேரலை துண்டிக்கப்பட்டிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

 

நேற்றைய தினம் (19.06.2026) மேகேதாட்டு அணை கட்டுவதைக் கண்டித்து முதல்வர் கொண்டு வந்த அரசினர் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேரலை செய்யப்பட்டன. அடுத்து, உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரை மீதான விவாதங்கள் தொடங்கிய நிலையில், அவை இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படவில்லை. இது இன்றைய ஆளுங்கட்சி கொடுத்த வாக்குறுதிக்கு மாறானது ஆகும். மக்கள் பிரதிநிதிகளின் குரலை மறைப்பது ஆகும். சட்டப்பேரவை மாண்பைக் குலைப்பதாகும்.

நேரலை நிறுத்தப்பட்டது மிகப் பெரிய தவறு என்றால், அதைவிடப் பெரிய தவறு பின்னர் இழைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் விவாதங்கள் முற்றிலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, ஆளுங்கட்சியினருக்கு வேண்டிய விவாத வீடியோக்கள் மட்டும் எடிட் செய்யப்பட்டு மாலையில் வெளியிடப்பட்டுள்ளன. பேச்சுரிமையை, அதிலும் குறிப்பாகச் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அவைக்குள் இருக்கும் பேச்சுரிமையை நகக்கும் செயலாகும். இது நல்லதொரு ஆக்கப்பூர்வமான சட்டப்பேரவை ஜனநாயகத்துக்கு உகந்தது இல்லை.

இதையும் படிக்க : செந்தில் பாலாஜியின் சகோதரரை வலைவீசி தேடும் போலீஸ்.. சென்னைக்கே வந்த கரூர் போலீசார்.. அதிரடி சோதனை!!

‘மாற்றம்’ என்ற சொல்லை மையமாக வைத்துத் தேர்தலைச் சந்தித்தவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் குரலை நசுக்குவதுதான் அவர்கள் செய்ய நினைக்கும் மாற்றமா? மக்கள் பிரதிநிதிகளின் பேச்சை மறைப்பது மக்களையே அவமானப்படுத்துவது ஆகும். வரும் திங்கட்கிழமையன்று (22.06.2026) எதிர்க்கட்சித் தலைவரான நானும், பிற தலைவர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் உரையாற்ற உள்ளதால், தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை நேரலை செய்வதற்குத் தங்களுக்கு உள்ள பேரவைத் தலைவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் சட்டப்பேரவை கூடுவதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும்; மக்கள் அளித்த வாக்குக்கே மரியாதை இல்லாமல் போய்விடும் இவ்வாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

Follow Us