AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நெல்லையில் சம்பவம்… தென்காசியில் பதுங்கல்.. கத்தியை காட்டி நகை-பணம் வழிப்பறி.. இருவரை தூக்கிய போலீஸ்!

Nellai Robbery 2 Arrested : நெல்லை மாவட்டத்தில் கத்தியை காட்டி நகை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை தென்காசியில் வைத்து முன்னீர்பள்ளம் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களி டம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது .

நெல்லையில் சம்பவம்… தென்காசியில் பதுங்கல்.. கத்தியை காட்டி நகை-பணம் வழிப்பறி.. இருவரை தூக்கிய போலீஸ்!
வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 02 Oct 2026 21:43 PM IST

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி ஆரைக்குளம். இந்த பகுதியில் புதிய தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள அசோக் நகர் விரிவாக்க பகுதியில் கடந்த செப்டம்பர் 4- ஆம் தேதி அதிகாலை மகேந்திரன் ( 32 வயது) என்பவர் காரில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இரு இளைஞர்கள் திடீரென அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தங்கள் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மகேந்திரனிடம் மிரட்டி அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ. 500 ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் மகேந்திரன் புகார் அளித்திருந்தார்.

கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு

அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக, சேரன்மகாதேவி உள் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் மேற்பார்வையில் முன்னீர் பள்ளம் உதவி காவல் ஆய்வாளர் மாரியப்பன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: எட்டயபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது பாய்ந்த ஆம்னி பேருந்து.. சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்.. 6 பேருக்கு தீவிர சிகிச்சை!

தென்காசியை சேர்ந்த இருவர் அதிரடி கைது

அத்துடன், நகைகளை இழந்த மகேந்திரனிடம், குற்றவாளிகள் குறித்த அடையாளங்களையும் போலீசார் சேகரித்தனர். அதன் அடிப்படையில், அந்த நபர்கள் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் ( 22 வயது) மற்றும் தென்காசி களக்குடி தெருவை சேர்ந்த அரவிந்த் ( 32 வயது) ஆகிய இருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் இருவரும் மகேந்திரனை கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்ததை ஒத்துக் கொண்டனர்.

24 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

தொடர்ந்து, அவர்களிடம் இருந்து சுமார் 24 கிராம் எடையுள்ள தங்க சங்கிலிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் சாஸ்திரி அறிவுறுத்தலின் அடிப்படையில், கொள்ளை மற்றும் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் விரைந்து கைது செய்யப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: வாக்காளர்களுக்கு தங்க நாணயமா? ரூ.3.5 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கம் பறிமுதல்.. இடைத்தேர்தல் தொகுதியில் பரபரப்பு!

Follow Us