AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருச்சி விமான நிலையத்தை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு? திருப்பதியுடன் இணைந்து குத்தகைக்கு விட திட்டம்

Trichy Airport to Be Privatised : திருச்சி சர்வதேச விமான நிலையத்தை, ஆந்திராவின் திருப்பதி விமான நிலையத்துடன் இணைத்து தனியாருக்குக் குத்தகைக்கு விட மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாட்டில் உள்ள 11 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருச்சி விமான நிலையத்தை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு? திருப்பதியுடன் இணைந்து குத்தகைக்கு விட திட்டம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Sep 2026 20:24 PM IST

திருச்சி சர்வதேச விமான நிலையத்தை, ஆந்திராவின் திருப்பதி விமான நிலையத்துடன் இணைத்து தனியாருக்குக் குத்தகைக்கு விட மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின்கட்டுப்பாட்டில் உள்ள 11 விமான நிலையங்களை மேம்படுத்தும் பெரிய திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

திருச்சி விமான நிலையத்தை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு?

பொதுவாக, லாபகரமாக இயங்கும் பெரிய விமான நிலையங்களை ஏலம் எடுக்க தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டும். ஆனால் வருவாய் குறைவான சிறிய விமான நிலையங்களுக்கு அத்தகைய வரவேற்பு இருப்பதில்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்கும் நோக்கில் பண்ட்லிங் எனப்படும் தொகுப்பு முறையை மத்திய அரசு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்.. யார் யாருக்கு என்ன பொறுப்பு!

இதன்படி, அதிக பயணிகள் போக்குவரத்தும் வருவாயும் கொண்ட ஒரு விமான நிலையத்தோடு, வருவாய் குறைந்த ஒரு விமான நிலையம் சேர்க்கப்பட்டு, இரண்டும் ஒரே நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். மத்திய அரசின் பொது மற்றும் தனியார் கூட்டாண்மை மதிப்பீட்டுக் குழு இந்த முறையை முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் பரிந்துரைப்படி, 11 விமான நிலையங்கள் ஐந்து தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு தனியாருக்கு வழங்கப்பட உள்ளன. அதில், பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள திருச்சியுடன் திருப்பதி விமான நிலையம் ஒரே தொகுப்பில் இடம்பெறுகிறது.

தனியார் முதலீடுகள் மூலம் இரு விமான நிலையங்களையும் நவீனப்படுத்தி, சர்வதேசத் தரத்திலான கட்டமைப்புகளை உருவாக்க முடியும் என மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. அதோடு, விமான நிலைய வளாகங்களில் வணிகக் கடைகள், சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட பயணக் கட்டணம் அல்லாத வருவாய் வழிகளை விரிவுபடுத்துவதும் இத்திட்டத்தின் இலக்குகளில் ஒன்று.

திருப்பதியைப் பொறுத்தவரை, ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், அங்குள்ள விமான நிலையத்தில் நெரிசல் கூடிக்கொண்டே போகிறது. புதிய முதலீடுகள் வந்தால், அங்குள்ள வசதிகளை விரைவாக மேம்படுத்த முடியும் என அரசு எதிர்பார்க்கிறது.

விமான நிலையங்களைத் தனியாருக்கு வழங்குவது இது முதன்முறையல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டிலேயே அகமதாபாத், லக்னோ, மங்களூரு, கவுஹாத்தி, திருவனந்தபுரம் ஆகிய 5 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டன. இதன் அடுத்த கட்டமாகத்தான் தொகுப்பு முறை என் பகுதிய முறையை மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. திருச்சி – திருப்பதி தொகுப்பு குறித்து மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இறுதி முடிவு, ஏல நடைமுறை மற்றும் காலக்கெடு குறித்த விவரங்கள் இனிமேல்தான் தெரியவரும்.

இதையும் படிக்க : முதல்வர் விஜய் பாணியில் களமிறங்கிய அமைச்சர் அருண்ராஜ்.. தாராபுரம் மக்களை கவர புதிய யுக்தி!

மேலும் ஆந்திராவின் ராஜமகேந்திரவரம் மற்றும் கடப்பா விமான நிலையங்களையும் இதே முறையில் தனியாருக்கு வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. ராஜமகேந்திரவரத்தில் கட்டப்படும் புதிய உள்நாட்டு முனையம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடப்பாவில் விமான நிலைய பணிகளில் சுமார் 70 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. இந்த விமான நிலையங்களில் சேவைகளும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்த பிறகே அவை தனியாருக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

Follow Us