டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி – ராகுல் காந்தியை சந்தித்த முதல்வர் விஜய்
சென்னை, ஜூன் 10 : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூன் 11, 2026 நாளை நடைபெறவிருக்கிற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜூனா கார்கே ஆகியோரை சந்தித்தார்.
சென்னை, ஜூன் 10 : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூன் 11, 2026 நாளை நடைபெறவிருக்கிற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜூனா கார்கே ஆகியோரை சந்தித்தார். தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த பிறகு முதன்முறையாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்திப்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஜூன் 11, 2026 நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்த நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் விஜய் 3 நாட்கள் பயணமாக ஜூன் 10, 2026 இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். இதனையடுத்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிக்க : 5 தொகுதி இடைத்தேர்தல்.. தேர்தல் அலுவலர்கள் நியமனம்.. விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு!
அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற முதல்வர் விஜய் மரியாதை நிமித்தமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனையும் முதல்வர் விஜய் சந்தித்தார். அப்போது துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நடராஜர் சிலையை முதல்வர் விஜய் பரிசாக வழங்கினார்.
காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த முதல்வர் விஜய்
Tamil Nadu CM Shri C. Joseph Vijay met CPP Chairperson Smt. Sonia Gandhi ji and LoP Shri @RahulGandhi at 10 Janpath, New Delhi. pic.twitter.com/8XxR0LhQ4K
— Congress (@INCIndia) June 10, 2026
தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்த நிலையில் ஜூன் 10, 2026 இன்று முதன்முறையாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூனா கார்கே ஆகியோரையும் முதல்வர் விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் அரங்கில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : மின்தடை புகார்.. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு.. ஆக்ஷனில் இறங்கிய மின் வாரிய தலைவர்!
முன்னதாக கடந்த மே 27, 2026 அன்று முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக டெல்லி சென்ற விஜய் பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் குறித்து கடிதம் வழங்கினார். இதனையடுத்து காங்கிரஸ் தலைவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மட்டும் சந்தித்துவிட்டு தமிழ்நாடு திரும்பினார். காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் தற்போது காங்கிரஸ் தலைவர்களை அவர் சநித்துள்ளார்.



