இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு.. நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்..
அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஜூன் 10, 2026: தமிழ் சினிமாவின் “இயக்குனர் இமயம்” என அழைக்கப்படும் பாரதிராஜா இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். அவருக்கு வயது 84. கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார். இந்த செய்தி திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், உடல் நலக்குறைவால் காலமான இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.pic.twitter.com/b1VKL60hf5
— VTL Team (@VTLTeam) June 10, 2026
அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் படிக்க: மறைந்த பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை.. முதல்வர் விஜய் அறிவிப்பு!!
அதேபோல், பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு சென்னையில் நடைபெறுமா அல்லது அவரது சொந்த ஊரில் நடைபெறுமா என்பது குறித்து குடும்பத்தினரிடையே ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, பாரதிராஜாவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் மரியாதை:
தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைமொழியில் தனிமொழி… pic.twitter.com/cCi5wc46zT
— M.K.Stalin (@mkstalin) June 10, 2026
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உடனடியாக சென்னை திரும்பி நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பாரதிராஜாவின் மகளிடம் ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்தார்.
பாரதிராஜாவின் உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து, நடிகை ராதிகா, இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் கிராமிய மண்வாசனையை திரைத்திரையில் கொண்டு வந்த முக்கிய இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜாவின் மறைவு, திரையுலகினரும் ரசிகர்களும் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.