AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் 5 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் – மின்துறை அமைச்சர் தகவல்

மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய 5 இடங்களை தலைமையிடமாக கொண்டு 5 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் உருவாக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் 5 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் – மின்துறை அமைச்சர் தகவல்
அமைச்சர் நிர்மல் குமார்
Karthikeyan S
Karthikeyan S | Published: 19 Jun 2026 19:29 PM IST

சென்னை, ஜூன் 19 : மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய 5 இடங்களை தலைமையிடமாக கொண்டு 5 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் உருவாக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்ட 5 எரிசக்தி மண்டலங்களின் எரிசக்தி திட்ட செயல்பாட்டை வலுப்படுத்த தலைமையகத்தில் தனித்திட்ட அமலாக்கம் மற்றும் கண்காணிப்பிற்கான கூடுதல் பொறுப்புகளும் சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் 5 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள்

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், அதன் ஒரு பகுதியாக, காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்களின் செயல்பாடுகளை மேலும் விரைவுபடுத்தும் நோக்கில், ஏற்கனவே இயக்கத்தில் இருந்த உடுமலைப்பேட்டை மற்றும் திருநெல்வேலி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வட்ட அலுவலகங்களின் நிர்வாக அமைப்பு கைவிடப்பட்டு மறுசீரமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் மாநிலம் முழுவதும் சென்னை, திருச்சி. திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களை தலைமையிடங்களாகக் கொண்டு ஐந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, அரசின் பசுமை ஆற்றல் இலக்குகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்தும் வகையில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ஒன்றிணைந்து போராடுவோம் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி பதில்

அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்ட அறிவிப்பு

 

சென்னை மண்டலத்தில் சென்னை. காஞ்சிபுரம். வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மின்பகிர்மான மண்டலங்களிலும், திருச்சி மண்டலத்தில் திருச்சி, விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மின்பகிர்மான மண்டலங்களிலும், திருநெல்வேலி மண்டலத்தில் திருநெல்வேலி மின்பகிர்மான மண்டலம். கோயம்புத்தூர் மண்டலத்தில் கோயம்புத்தூர் மின்பகிர்மான மண்டலம் மற்றும் மதுரை மண்டலத்தில் கரூர். ஈரோடு மற்றும் மதுரை ஆகிய மின்பகிர்மான மண்டலங்களிலும் உள்ள காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில் மறுசீரமைக்கப்பட்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களின் நிர்வாகம், கண்காணிப்பு மற்றும் செயல்படுத்தும் பணிகளை இனிவரும் காலங்களில் உதவி செயற்பொறியாளர்களின் தலைமையில் மேற்கொள்ளும்.

இதையும் படிக்க : இந்திய கம்யூ. கட்சியின் அமைப்பு விதிகளுக்கு எதிராக செயல்பட்டவர் சி.மகேந்திரன்.. வீரபாண்டியன் காட்டம்!

மேற்கண்ட 5 எரிசக்தி மண்டலங்களின் எரிசக்தி திட்ட செயல்பாட்டை வலுப்படுத்த தலைமையகத்தில் தனித்திட்ட அமலாக்கம் மற்றும் கண்காணிப்பிற்கான கூடுதல் பொறுப்புகளும் சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்பு மூலம் நிர்வாகப் பணிகள் மேலும் விரைவுபடுத்தப்படுவதோடு. புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்குதல். மறுதிறன் மேம்பாடு (Repowering). தொழில்நுட்ப ஆய்வு. மின்உற்பத்தி வெளியேற்ற (Evacuation) தேவையான உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு, திட்ட கண்காணிப்பு மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் வெளிப்படையான சேவை வழங்குதல் போன்ற பணிகள் அதிக செயல்திறனுடன் மேற்கொள்ளப்படும்.

மேலும், மின்கல ஆற்றல் சேமிப்பு திட்டம் (BESS), பிரதம மந்திரி குசும் 2.0. (PM-KUSUM 2.) பிரதம மந்திரி மேற்கூரை சோலார் பிரிவு.(PM-Rooftop Solar) மாதிரி சூரியசக்தி கிராமம். அரசு கட்டிடங்களில் சூரியசக்தி வசதி அமைத்தல் மற்றும் வரவிருக்கும் மிதக்கும் சூரியசக்தித் திட்டங்கள் போன்றவற்றைச் செயல்படுத்த களப்பணியாளர்கள் குழுவை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us