கோடை காலத்தில் பெண்களுக்கு குளிர்ச்சியான அறிவிப்பு.. அமைச்சர் கொடுத்த அப்டேட்!

Special Summer Allowance : தமிழகத்தில் பெண்களுக்கு ஆண்டு தோறும் ரூ.2000 கோடை கால சிறப்பு தொகை வழங்கப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பானது அனைத்து தரப்பு பெண்கள் மத்தியில் மிகுந்த வரவற்பை பெற்றுள்ளது .

கோடை காலத்தில் பெண்களுக்கு குளிர்ச்சியான அறிவிப்பு.. அமைச்சர் கொடுத்த அப்டேட்!

தமிழகத்தில் பெண்களுக்கு ரூ.2000 கோடை கால சிறப்பு தொகை

Updated On: 

20 Feb 2026 07:56 AM

 IST

தமிழகத்தில் கடந்த பிப்ரவர் 17-ஆம் தேதி முதல் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கடந்த இரு நாட்கள் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், மகளிர் வாக்குகளை கவரும் வகையில் மகளிர் உரிமைத் தொகையுடன் சேர்த்து கோடைகால சிறப்பு தொகையாக ரூ.2000 இரவோடு இரவாக வரவு வைக்கப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கூறினார். அப்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்து பேசுகையில், கோடை காலத்தில் பொதுமக்களுக்கு மருத்துவச் செலவுகள் வரலாம் எனவும், இதற்கு ரூ.2000 கோடைகால சிறப்பு தொகை வழங்கப்பட்டதாக கூறினார்.

மகளிருக்கு ரூ.2000 கோடைகால சிறப்பு தொகை

மேலும், மாதம் தோறும் பெண்களுக்கு ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை தடுப்பதற்காக பாஜகவை சேர்ந்த மகளிர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனை, முறியடிக்கும் விதமாக மகளிர் உரிமை தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டதாக தெரிவித்தார். இதேபோல, ஆண்டுதோறும் கோடை காலங்களில் பெண்களுக்கு கோடைகால சிறப்பு தொகை ரூ.2000 வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க: புதிய கட்சியை தொடங்கினார் பண்ருட்டி ராமச்சந்திரன்.. “ஓபிஎஸ் அத்தியாயம் முடிந்ததாக காட்டம்”..

மகளிர் உரிமை தொகைக்கு எதிராக வழக்கு

இதனிடையே, எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வ. வேலு பதில் அளித்து பேசுகையில், கருணாநிதி ஆட்சி காலத்தில் பொது மக்களுக்கு இலவசமாக டிவி வழங்கப்பட்டது. அதற்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதே போல, மகளிர் உரிமை தொகைக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, முன்கூட்டியே மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டதாகவும், கோடைகால சிறப்பு நிதியும் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மகளிர் வங்கி கணக்கில் ரூ.5000 உரிமைத் தொகை

கடந்த சில நாட்களுக்கு முன்பு மகளிர் உரிமைத்தொகை பெற்று வரும் பெண்களின் வங்கி கணக்கில் தமிழக அரசு சார்பில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 மற்றும் கோடைகாலத்துக்கான (மே மாதம்) சிறப்பு தொகை ரூ.2000 என மொத்தம் ரூ.5000 வரவு வைக்கப்பட்டிருந்தது. இது தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெண் வாக்காளர்களை கவரும் வகையில் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தன. இந்த நிலையில், எதிர்வரும் கோடை காலங்களில் மகளிர்க்கு ரூ.2000 சிறப்பு தொகை வழங்கப்படுவதாக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

Related Stories
இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம்… நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை… திமுக அரசின் திட்டத்தை பட்டியலிட்டார்!
ரேஷன் கடைகளில் அரிசி மூட்டை மூலம் நூதன முறைகேடு? கடிவாளம் இட்ட கூட்டுறவு பதிவாளர்!
சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து… நுரையீரலில் மண் அடைத்ததால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. ஆபத்தான நிலையில் இருவர்!
ரயில் பயணிகள் கவனத்திற்கு… இன்று முதல் சென்னை கடற்கரை – தாம்பரம் செல்லும் 44 மின்சார ரயில்கள் ரத்து..
வீடு தேடி வந்த விபரீதம்.. வாடகைக்கு குடியேறிய போலி மருத்துவர் நூதன மோசடி.. நகை, பணத்தை இழந்த குடும்பம்..
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது… யுபிஎஸ்சி-க்கு பட்டியல் அனுப்பி வைப்பு!
வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களில் Emergency Quota .. எத்தனை சீட்கள் ஒதுக்கப்படும்?
மணமகளின் பையை திருடிச் சென்ற நபர்.. ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி கொள்ளை..
சந்தேகத்தின் பெயரில் காதலியை கொலைசெய்த காதலன்
ஏப்.30 வரை "ஜனநாயகன்" வெளியாக வாய்ப்பில்லை - ரசிகர்கள் அதிர்ச்சி!