AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Feb 2026 06:25 AM IST

வானிலை நிலவரம், பிப்ரவரி 20, 2026: பூமத்திய ரேகைக்குச் அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி நேற்று அதே பகுதியில் நிலவியது. இது மேலும் மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை நோக்கி நகர்ந்து வருவதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரக்கூடிய நாட்களில் அதே பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொட்டப்போகும் மழை:

இதன் காரணமாக, பிப்ரவரி 2026 ஆம் தேதியான இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 21 ஆம் தேதி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் மனு – என்ன காரணம்?

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி, திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில், ஒரு சில இடங்களில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு மட்டும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பனிமூட்டம் இருக்குமா?

பனிமூட்டத்தைப் பொறுத்தவரையில், வட தமிழக மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், பெரிய அளவு மாற்றம் இருக்காது என்றும், தற்போதைய நிலையே தொடரக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் இரவு நேர வெப்பநிலை:

குறைந்தபட்ச வெப்பநிலையிலும் பெரிய மாற்றம் இருக்காது என்றும், ஒரு சில இடங்களில் மட்டும் 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயர்ந்து பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

பகல் நேர வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் சூழலில், வரக்கூடிய நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.