AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் விஜய்யால் தமிழக அரசின் சமூக ஊடகத்தில் எகிரும் பாலோவர்ஸ் எண்ணிக்கை.. 5 நாள்களில் 5 மடங்கு உயர்வு!

TN Govet Social Media Followers : தமிழகத்தின் முதல் அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதை அடுத்து, அரசின் சமூக ஊடக பக்கங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதல்வர் விஜய்யால் தமிழக அரசின் சமூக ஊடகத்தில் எகிரும் பாலோவர்ஸ் எண்ணிக்கை.. 5 நாள்களில் 5 மடங்கு உயர்வு!
அரசின் சமூக ஊடக பாலோவர்ஸ் அதிகரிப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 15 May 2026 11:59 AM IST

தமிழக திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்த விஜய் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றார். இதை தொடர்ந்து, தமிழக அரசின் எக்ஸ் தள பக்கத்தில் முதல்வர் விஜயின் படம் பதிவேற்றம் செய்யப்பட்டது. அது முதல், அந்த எக்ஸ் தள பக்கத்தை பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், முன்னதாக 4 லட்சம் பின் தொடர்பவர்கள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை சுமார் 20 லட்சத்தை தாண்டி உள்ளது. அத்துடன் விஜய் பதவியேற்ற பிறகு இன்ஸ்டாகிராம் கணக்கிலும் இது போன்ற ஒரு எழுச்சி காணப்பட்டு வருகிறது அதில், பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 4 லட்சத்தில் இருந்து 20 லட்சத்தை தாண்டி உள்ளது. இதன் மூலம் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்க: நாட்டின் பிரதமர் விஜய்… தமிழகத்தின் முதல்வர் அஜித் குமார்.. ரக்கி ராதன் பண்டிட் கணிப்பால் அதிரும் அரசியல் களம்!

முதல்வர் ஜோசப் விஜய்யின் புகைப்படத்துக்கு 10 லட்சம் பார்வையாளர்கள்

இதில், முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் சி. ஜோசப் விஜயின் புகைப்படம் மட்டும் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. ஒரு அரசின் எக்ஸ் தள கணக்கிற்கு இந்த திடீர் வளர்ச்சி உண்மையிலேயே எதிர்பாராத ஒன்றாகும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தின் அதிகாரப்பூர்வ ஒலி – ஒளி பரப்பு தளமான தமிழ்நாடு தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறையின் யூடியூப் சேனலும் பதவியேற்பு விழாவின் நேரலை ஒளிபரப்பின் மூலம் தற்போது 2 லட்சத்து 80 ஆயிரம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

தவெக தலைவர் விஜய்யால் இந்த மாற்றம்

தற்போது இளைஞர்கள் செய்தி நிறுவனங்கள் அல்லது ரசிகர் பக்கங்களுக்கு பதிலாக தங்களுக்கு பிடித்தமான நடிகரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய்யின் செயல்பாடுகளை கண்காணிக்க அரசின் பக்கங்களையே நாடி வருகின்றனர். நெருக்கடி காலங்களை தவிர, அரசு இணையதளங்களோ அவற்றின் சமூக ஊடகப் பக்கங்களும் மிக குறைவாகவே பார்வை இடப்படும் நிலையில், முதல் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் நட்சத்திர அரசியல்வாதி இந்த நிலைமையை மாற்றி உள்ளார்.

தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற நாள் முதல்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத காரணத்தால் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மே 10- ஆம் தேதி முதல்வராக பதவி ஏற்றார். அந்த நாள் முதல் தற்போது வரை தமிழக அரசின் சமூக ஊடக கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு.. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய சுற்றறிக்கை!

Follow Us