தமிழக வெற்றிக் கழக அரசை காங்கிரஸ் ஆதரிக்க காரணம் என்ன? கார்த்திக் சிதம்பரம் எம்.பி.விளக்கம்!
Karthik Chidambaram MP: திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்க வகித்து தேர்தல சந்தித்த காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்ததற்கு காரணம் என்ன என்பதை அந்தக் கட்சியின் எம்.பி.யான கார்த்திக் சிதம்பரம் விளக்கினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்து இருந்த காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 23 தொகுதிகளில் தோல்வியை தழுவி 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. அதன் பின்னர், திமுக கூட்டணியை விட்டு, தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இணைந்தது. இது தொடர்பாக திமுகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு விமர்சனங்களை வைத்திருந்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எம். பி. ஆன கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் மீதான திராவிட முன்னேற்றக் கழகத்தின் விமர்சனம் தேவை இல்லாதது. திமுகவுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் தேர்தலை சந்தித்து இருந்தது. தேர்தலுக்கு முன்னரே வேறு கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் என்று கட்சியில் இருந்தவர்கள் கூறினர்.
திமுக – காங்கிரஸ் நீண்ட கால கூட்டணி
ஆனால், திமுக- காங்கிரஸ் நீண்ட நாள் கூட்டணி என்பதால் அதே கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்தது. அதன்படியே சட்டமன்ற தேர்தலை முழு மனதுடன் சந்தித்தோம். ஆனால், தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதமாக வரவில்லை. அத்துடன், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பினர். அதிலும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு திமுகவுக்கு கிடைக்காமல் போனது. தமிழக வெற்றி கழகம் தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதில், 2 அல்லது 3 கட்சிகளுடன் இணைந்து தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்று மக்கள் தீர்ப்பளித்தனர்.
மேலும் படிக்க: “விரைவில் மகளிர் உரிமைத் தொகை”… முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!
திமுக முதுகில் காங்கிரஸ் குத்தியதாக கூறுவது சரியல்ல
ஆரோக்கியமான எதிர்கட்சியாக திராவிட முன்னேற்ற கழகம் இருக்கும். திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் மீது எப்போதும் மரியாதை உள்ளது. தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாத திமுக முதுகில் காங்கிரஸ் கட்சி குத்தியது என கூறுவது பொருத்தமற்றதாகும். திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சி அமைக்கும் நிலையில் இருந்து நாங்கள் தவிர்த்து விட்டோம் என்றால் அவ்வாறு கூறலாம். தற்போது, பரஸ்பரமாக கூறி திமுக காங்கிரஸ் பிரிந்து இருக்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு எதற்கு
அதை வேண்டுமென்றால் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக எந்த வாய்ப்பையும் நாங்கள் மறுக்கவில்லை. தமிழகத்தில் நிலையான ஆட்சி, மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்ற காரணத்துக்காகவே தமிழக வெற்றி கழகத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது என்று தெரிவித்தார். இதனிடையே, காங்கிரஸ் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2 அமைச்சர் இடங்கள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இடங்களை யாருக்கு வழங்கலாம் என்று காங்கிரஸ் தலைமை ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: “டாஸ்மாக்கில் இனி கூடுதலாக வசூலிக்க முடியாது”.. பறக்கும் படை அதிரடி சோதனையில் இறங்க உத்தரவு!