தமிழக சட்டமன்றத்தில் மாபெரும் காது குத்து விழா… அதிமுகவினர் வெளியிட்ட வினோத பத்திரிக்கை!

Tamil Nadu Government Interim Budget: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை விமர்சனம் செய்யும் வகையில் அதிமுகவினர் ஒரு வினோதமான பத்திரிக்கையை வெளியிட்டுள்ளனர். இதில், இன்று தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட் பொது மக்களுக்கு காது குத்தும் மாபெரும் விழா நடைபெற உள்ளதாக விமர்சித்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் மாபெரும் காது குத்து விழா... அதிமுகவினர் வெளியிட்ட வினோத பத்திரிக்கை!

தமிழக சட்டமன்றத்தில் மாபெரும் காது குத்து விழா

Updated On: 

17 Feb 2026 10:01 AM

 IST

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக அமைச்சரவை கூட்டப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, பிப்ரவரி 17- ஆம் தேதி தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு தெரிவித்திருந்தார். இதற்கான, ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு, முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் சேர்க்கப்பட்டு தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தயார் செய்யப்பட்டது. அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை ( பிப்ரவரி 17 ) தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த நிலையில், தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை விமர்சனம் செய்யும் வகையில் அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வினோதமான பத்திரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த பத்திரிகையில் இன்று சட்டப்பேரவையில் மாபெரும் காதுகுத்து விழா நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

4.5 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு காது குத்து விழா

மேலும், தமிழகத்தில் கடந்த 4.5 ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழக மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்து விழா இந்த வருடம் இன்று செவ்வாய்க்கிழமை ( பிப்ரவரி 17) தமிழக சட்டப்பேரவையில் வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். மாண்புமிகு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முன் நின்று காது குத்துகிறார் என்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

மேலும் படிக்க: துரோகத்தின் பெயரால் காங்கிரஸை தோற்கடிப்பது திமுக தான் – அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு..

மக்களை ஏமாற்றும் இடைக்கால பட்ஜெட்

அன்று முதல் தற்போது திமுக அரசின் ஆட்சி காலம் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக மக்களுக்கு எந்த ஒரு வளர்ச்சிக்கான திட்டத்தையும் அறிவிக்காமல், தற்போது ஆட்சி காலம் முடிவடையும் நிலையில், தமிழக மக்களை ஏமாற்றுவதை போல அவர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவிப்பதாக இடைக்கால பட்ஜெட்டை திமுக அரசு தாக்கல் செய்துள்ளது. இது பொது மக்களுக்கான பட்ஜெட் இல்லை. தமிழக மக்களுக்கு காது குத்துவது போல இருப்பதாக அதிமுக எம்எல்ஏக்கள் வெளியிட்ட பத்திரிக்கை செய்தி குறிப்பிடுகிறது.

அதிமுகவின் வினோதமான விமர்சனம்

வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வாக்காளர்களை கவரும் வகையில் திமுக அரசு பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில், தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதாக கூறும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் இடைக்கால பட்ஜெட் தாக்கலை காது குத்து விழா என்று வினோதமான முறையில் விமர்சனம் செய்துள்ளது.

மேலும் படிக்க: கொசுக்களுக்கு கொண்டாட்டம், மக்களுக்கு திண்டாட்டம்.. எகிறும் டெங்கு பாதிப்பு – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..

திரைப்பட விருது விழா.. சூர்யாவுக்கு மாற்றி கொடுக்கப்பட்ட ரஹ்மானின் விருது.. மேடையில் சிரிப்பலை
மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’.. வெளியீட்டு தேதி & முக்கிய அப்டேட்!!
வானில் வெடித்த விமான எஞ்சின்.. பயத்தில் உறைந்த பயணிகள்.. ஷாக் சம்பவம்!!
தங்கத்துக்கு நிகரான மதிப்பை தரும் அரிய மரம்.. அதிசயம்!!