‘போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன்’ – முதல்வர் விஜய் முன்னிலையில் உறுதியேற்ற மாணவர்கள்
சென்னை மாநிலக் கல்லூரி அரங்கில் நடைபெறும் 'போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு' நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்றார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 'நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன் என முதல்வர் விஜய் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
சென்னை, ஆகஸ்ட் 11 : சென்னை மாநிலக் கல்லூரி அரங்கில் ஆகஸ்ட் 11, 2026 இன்று நடைபெறும் ‘போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்றார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ‘நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன் என முதல்வர் விஜய் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட மாநிலம் தழுவிய போதைப்பொருட்கள் அழிக்கும் நடவடிக்கை முதல்வர் விஜய் முன்னிலையில் காணொலி வாயிலாக நடைபெற்றது செங்கல்பட்டு, நெல்லை, கோவை, தஞ்சை ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களை அளிக்கும் பணிகளை முதல்வர் விஜய் காணொளி வாயிலான பார்த்தார்.




இதையும் படிக்க : வருண பகவானே இறங்கி வா.. இரு கழுதைகளுக்கு மேள தாளத்துடன் திருமணம்.. வேலூரில் வினோத வழிபாடு!
முதல்வர் விஜய் முன்னிலையில் உறுதியேற்ற மாணவர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு – DRUG FREE TAMIL NADU – மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விருதுகள் வழங்கும் விழா.https://t.co/NEvdkTASBX#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |…
— TN DIPR (@TNDIPRNEWS) August 11, 2026
போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சென்னை மாநிலக் கல்லூரியில் முதல்வர் விஜய் தலைமையில் ஆகஸ்ட் 11, 2026 இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த முதல்வர் விஜய்க்கு காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் விழா மேடைக்கு வந்த முதல்வர் விஜய் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை மற்றும் புகையிலை இல்லா வளாகம் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கை முதல்வர் விஜய் முன்னிலையில் காணொளி வாயிலாக நடைபெற்றது. அப்போது செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோயம்புத்தூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களை அழிக்கும் பணிகளை காணொளி வாயிலாக முதல்வர் பார்த்தார்.
இதையும் படிக்க : ஆர்.பி.உதயகுமார் மீது கைது நடவடிக்கை? முதல்வர் விஜய்யை டவுசர் பையன் என விமர்சனம்.. தவெக நிர்வாகி பரபரப்பு புகார்!
அதனைத் தொடர்ந்து போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற பெயரில் இயக்கத்தை முதல்வர் விஜய் துவக்கி வைத்து மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். ‘நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன்’… போதைப்பொருள் ஒழிப்பிற்கு எனது பங்களிப்பை முழுமையாக தருவேன் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதனையடுத்து மதுவிலக்கு பிரிவில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு முதல்வர் விஜய் விருது வழங்கி சிறப்பித்தார். மேலும் போதைப்பொருள் தடுப்பு மன்றங்களில் சிறந்து விளங்கிய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை முதல்வர் வழங்கினார்.