பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. சுதந்திர தினம்- வார இறுதி லீவுக்கு ஈசியா ஊருக்கு போகலாம்.. அதிரடி பிளான் போட்ட தமிழக அரசு!
Special Government Buses Operated : தமிழகத்தில் சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாள்களையொட்டி, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்தப் பேருந்துகள் எப்போது, எங்கிருந்து இயக்கப்படும் என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் அரசு விடுமுறை நாட்கள், வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அத்துடன், வார இறுதி நாட்களும் வருவதால், தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதே போல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெறும். இதற்காகவும், வார இறுதி நாட்களும் ஒன்றாக வருவதால் ஏராளமான பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள்
அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு ஏதுவாக தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஊர்களுக்கு ஆகஸ்ட் 14- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) மற்றும் ஆகஸ்ட் 15- ஆம் தேதி ( சனிக்கிழமை) 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: “எனக்கு கிடைக்காதவள் எவனுக்கும் கிடைக்கக்கூடாது” திருப்பூர் தாய்- மகள் இரட்டை கொலை.. கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்!




சொந்த ஊர்களில் இருந்து திரும்பவும் சிறப்பு பேருந்துகள்
இதே போல, சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்காக ஆகஸ்ட் 16- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக www.tnstc.in என்ற போக்குவரத்து கழக இணையதளத்திலோ அல்லது tnstc- என்ற செல்போன் செயலியிலோ முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள் திட்டமிட்டு இயக்கம்
தமிழகத்தில் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான வெளியூர் வாசிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமாகும். அவ்வாறு செல்லும் பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாட்கள் ஒன்றாக வருவதன் காரணமாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: பழனி நில மோசடி.. சிக்கலில் சஸ்பெண்ட் சார்-பதிவாளர்.. அடுத்தடுத்து பாயும் வழக்குகள்!