AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் குவியும் தென்மாநில முதல்வர்கள்.. அமித் ஷா தலைமையில் மாபெரும் மாநாடு.. தேதி குறித்த மத்திய அரசு!

South Indian CMs Conference : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னை அருகே கோவளத்தில் தென்னிந்திய முதல் அமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற ஆகஸ்ட் 19, 20- ஆம் தேதியில் மாநாடு நடைபெறுகிறது.

தமிழகத்தில் குவியும் தென்மாநில முதல்வர்கள்.. அமித் ஷா தலைமையில் மாபெரும் மாநாடு.. தேதி குறித்த மத்திய அரசு!
மத்திய அமைச்சர் அமித்ஷா
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 13 Aug 2026 20:30 PM IST

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள மாநில முதல்- அமைச்சர்கள் மாநாடு வருகிற ஆகஸ்ட் 19 மற்றும் 20- ஆம் தேதிகளில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செங்கல்பட்டு மாவட்டம், கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதில், தமிழகம், ஆந்திர பிரதேசம், கேரளம், கர்நாடகா, தெலுங்கானா , புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த முதல்- அமைச்சர்கள், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் மற்றும் முதல் அமைச்சர், அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் ஆகியோர்கள் பங்கேற்க உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் வகையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

மாநிலங்களுக்கான ஒருங்கிணைப்பு குறித்து ஆலோசனை

மேலும், பிற மாநிலங்களுக்கான ஒருங்கிணைப்புகள், வளர்ச்சி திட்டங்கள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது, தமிழக மற்றும் கர்நாடகா இடையே இருந்து வரும் காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிகிறது. இது மட்டும் இன்றி, மக்களவைத் தொகுதி மறு வரையறை மசோதா நிறைவேற்றம் தொடர்பான கருத்துக்கள் உள்ளிட்டவை தொடர்பாக பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: “ஏரியிலிருந்து மண் திருட்டு.. அரசுக்கு ரூ.8 கோடி இழப்பு!”.. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது அதிரடி புகார்.. லஞ்ச ஒழிப்புத் துறையில் முறையீடு!

தவெக அரசு அமைந்த நிலையில் முதல்வர்கள் மாநாடு

ஏற்கனவே, கடந்த 2022- ஆம் ஆண்டு தென்னிந்திய முதல்- அமைச்சர்கள் மாநாடு கேரள மாநிலத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அப்போதைய திராவிட முன்னேற்ற கழக அரசின் பிரதிநிதிகள் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு பதிலாக பங்கேற்றனர். அப்போது, தமிழகத்தின் கோரிக்கைகள் உள்ளிட்டவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. தற்போது, தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், இந்த மாநாடு நடைபெற உள்ளது.

முதல்வர் ஜோசப் விஜய்  பங்கேற்பாரா

இதில், முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்று பேச உள்ளாரா அல்லது முதல்வரின் பிரதிநிதிகளாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனரா என்பது முக்கியமாக பார்க்கப்பட வேண்டி உள்ளதாக உள்ளது. தற்போது, தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தென்னிந்திய முதல் அமைச்சர்கள் மாநாடு நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதில், முதல்வர் விஜய் பங்கேற்கிறாரா என்பது குறித்த விவரங்கள் பின்னர் வெளியிட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க: “அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சிப் பூசல்!”.. இபிஎஸ்-க்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் ரகசிய ஆலோசனை!!

Follow Us