AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டிஜிட்டல் கைது என மிரட்டி ரூ.46.50 லட்சம் மோசடி – சிவகங்கையில் பரபரப்பு

Sivaganga Cybercrime Arrest : பெங்களூரு காவல்துறை அதிகாரிகள் போல் நடித்து, டிஜிட்டல் அரெஸ்ட் செய்துவிட்டதாக பயமுறுத்தி ஒருவரிடம் ரூ.46.50 லட்சம் பறித்த மோசடி வழக்கில், 2 பேரை சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டிஜிட்டல் கைது என  மிரட்டி ரூ.46.50 லட்சம் மோசடி – சிவகங்கையில் பரபரப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Oct 2026 19:12 PM IST

சிவகங்கை, அக்டோபர் 11: நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மக்களை எச்சரித்து வருகின்றன. இந்த நிலையில், பெங்களூரு காவல்துறை அதிகாரிகள் போல் நடித்து, டிஜிட்டல் அரெஸ்ட் செய்துவிட்டதாக பயமுறுத்தி ஒருவரிடம் ரூ.46.50 லட்சம் பறித்த மோசடி வழக்கில், 2 பேரை சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகதுயில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

டிஜிட்டல் கைது என மிரட்டி ரூ.46.50 லட்சம் மோசடி

இதுகுறித்து வெளியான தகவலின்படி சிவகங்கையை சேர்ந்த ஒருவரிடம், அடையாளம் தெரியாத சிலர் தொடர்புகொண்டு தங்களைப் பெங்களூரு காவல்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் அவரது அடையாள ஆவணங்கள் சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி அவரை பயமுறுத்தியுள்ளனர். அதனால் அவர் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மிரட்டியுள்ளனர். பின்னர், பணம் கொடுத்தால் வழக்கிலிருந்து விடுவிப்பதாக நம்ப வைத்து, அவரிடமிருந்து தவணை முறையில் ரூ.46.50 லட்சம் வரை பெற்று ஏமாற்றியுள்ளனர்.

இதையும் படிக்க : மதுரை, கோவை மெட்ரோ ரயில் சேவை, கோதாவரி – காவரி இணைப்பு – பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை

இந்த நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த நபர், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், மோசடி, ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் கணினி வழியில் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இதன் ஒரு பகுதியாக மோசடிப் பணம் எந்த வங்கிக் கணக்குகளுக்குச் சென்றது என்பதைப் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சைபர் மோசடிக் கும்பலுக்குத் தேவையான வங்கிக் கணக்குகளை அளித்த இருவர் குறித்த விவரம் தெரியவந்தது. அதன் பெயரில் ஹிதேஷ் சஞ்ஷெட்டி மற்றும் சையத் ரஹ்மான் ஆகியோர் தங்கள் வங்கி கணக்குகளில் வரவு வைத்து, அதற்குக் கமிஷன் பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மோசடியில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்தும் விசாரணை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இந்தியச் சட்டத்தில் ‘டிஜிட்டல் கைது’ என்ற நடைமுறையே இல்லை. காவல்துறையோ, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளோ வீடியோ அழைப்பு மூலம் யாரையும் கைது செய்வதில்லை. வழக்கிலிருந்து விடுவிக்கப் பணம் கேட்பதும் இல்லை. இதுபோன்ற அழைப்புகள் வந்தால் அது மோசடிதான் என்பதைப் பொதுமக்கள் உணர வேண்டும் என மத்திய அரசும் காவல்துறையும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

இதையும் படிக்க : வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ பயணம் – யுபிஐ மூலம் டிக்கெட் எடுத்த பிரதமர் மோடி

காவல்துறை அல்லது அரசு அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு யாரேனும் தொலைபேசியில் மிரட்டினாலோ, பணம் கேட்டாலோ, உடனடியாகப் பணம் அனுப்ப வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். சந்தேகத்துக்குரிய சைபர் மோசடிகள் குறித்து தேசிய சைபர் குற்ற உதவி எண் 1930-ஐ அழைத்தோ, www.cybercrime.gov.in இணையதளத்திலோ உடனடியாகப் புகார் அளிக்கலாம்.

Follow Us