AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs WI: 3வது டி20யிலும் சேஸிங்தான் வேணும்.. இந்தியாவை பேட் செய்ய அழைத்த வெஸ்ட் இண்டீஸ்!

IND vs WI 3rd T20: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோப், நான் என்ன செய்யப்போகிறேன் என்பது நம் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அதனால் நாங்கள் மீண்டும் முதலில் பந்துவீசப் போகிறோம். கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் விளையாடும்போது அது சவாலானதாக இருக்கும் என்றார்.

IND vs WI: 3வது டி20யிலும் சேஸிங்தான் வேணும்.. இந்தியாவை பேட் செய்ய அழைத்த வெஸ்ட் இண்டீஸ்!
Ind Vswi Playing Xi
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 11 Oct 2026 19:02 PM IST

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான (IND vs WI) 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து, இந்திய அணியை (Indian Cricket Team) பேட்டிங் செய்த அழைத்தது. இதனை தொடர்ந்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோப், “நான் என்ன செய்யப்போகிறேன் என்பது நம் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அதனால் நாங்கள் மீண்டும் முதலில் பந்துவீசப் போகிறோம். கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் விளையாடும்போது அது சவாலானதாக இருக்கும். இத்தகைய சூழலில் எவ்வளவு விரைவாகக் கற்றுக்கொள்ள முடியுமோ, அவ்வளவு விரைவாகக் கற்றுக்கொள்வதே முக்கியம். பல போட்டிகளின் முடிவுகளை ‘கேட்ச்’கள் தீர்மானிக்கின்றன என்பது எங்களுக்கு எப்போதும் தெரியும். ரொமாரியோ நலமாகத்தான் இருக்கிறார். ஆனால் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.” என்றார்.

ALSO READ: வெளியேறும் ஷிவம் துபே.. நிதிஷுக்கு வாய்ப்பு..? இந்திய பிளேயிங் லெவனில் மாற்றமா?

இரு அணிகளின் பிளேயிங் லெவன் எப்படி..?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளும் தங்களது ஆடும் லெவனில் மாற்றங்களைச் செய்துள்ளன. இந்திய அணியிலிருந்து சிவம் துபே நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரி்ன்ஸ் யாதவிற்கும் இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து ரொமாரியோ ஷெப்பர்ட் விலகியுள்ளார். கடந்த போட்டியில் ஷெப்பர்ட்க்கு காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி ப்ளேயிங் லெவன் விவரம்:


அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் தீர், அக்சர் படேல், மயங்க் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ்

ALSO READ: திரும்பிய ஃபின் ஆலன், லாக்கி ஃபெர்குசன்.. இந்தியாவிற்கு எதிரான NZ ஒருநாள் அணி அறிவிப்பு!

வெஸ்ட் இண்டீஸ் ப்ளேயிங் லெவன் விவரம்:

ஷாய் ஹோப் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), கமில் பூரன், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், குயின்டன் சாம்ப்சன், கீமோ பால், ரோஸ்டன் சேஸ், ஷமர் ஸ்பிரிங்கர், ஷமர் ஜோசப், குடாகேஷ் மோட்டி

Follow Us