Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாமக போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் தயார்? எந்தெந்த தொகுதிகள் தெரியுமா!

PMK Contesting Constituencies: 2026 சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்த உத்தேச பட்டியல் தயாராகி உள்ளதா கூறப்படுகிறது. இந்த பட்டியலில் எந்தெந்த தொகுதிகள் உள்ளன என்பது குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம் .

பாமக போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் தயார்? எந்தெந்த தொகுதிகள் தெரியுமா!
பாமக போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 09 Jan 2026 14:08 PM IST

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களுக்கான கூட்டணியை தேர்வு செய்யும் பணி, போட்டியிடும் தொகுதி உள்ளிட்டவற்றை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக- பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்ததாக அந்தக் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். இதை தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் சீட்டும் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனிடையே, பாட்டாளி மக்கள் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்த உத்தேச பட்டியல் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.

பாமக போட்டியிடும் தொகுதிகள் விவரம்

அந்த உத்தேச பட்டியலில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செஞ்சி, வானூர், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், கடலூர் மாவட்டம் நெய்வேலி, விருத்தாச்சலம், மயிலாடுதுறை, பூம்புகார், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, திருத்தணி, தருமபுரி, வேலூர் மாவட்டம் பென்னாத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, , ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: எடப்பாடியுடன் சந்திப்பு…உறுதி செய்யப்பட்டதா அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு…நயினார் கூறுவது என்ன!

பாரதீய ஜனதா கட்சி கேட்கும் 56 தொகுதிகள்

இந்த சட்டமன்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினால், சில தொகுதிகள் ஆலோசனையின் அடிப்படையில் மாற்றி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, பாரதிய ஜனதா கட்சி 56 சட்டமன்ற தொகுதிகள் கேட்டு வருவதாக கூறப்படும் நிலையில், அதற்கான தொகுதி பட்டியலும் தமிழக பாஜக தரப்பில் இருந்து பாஜக தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, அதிமுகவும் 170 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தொகுதி பங்கீட்டில் மாற்றம் வர வாய்ப்பு

இதனால், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் தொகுதிகளின் உத்தேச பட்டியலில் மாற்றம் வரலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான தொகுதி பங்கீடுகள் குறித்த பேச்சு வார்த்தை இந்த மாத இறுதியில் இறுதி கட்டத்தை எட்டும் என்று அதிமுக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. அதற்கான பணிகளில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, அன்புமணிக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் போர்க்கொடி தூக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அடுத்த கட்ட அரசியல் பயணம்.. ஜன.14ல் முடிவை அறிவிக்கிறார் ஓபிஎஸ்?