Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“கடைசி காலத்தில் நல்ல மனசு வந்துவிட்டது”.. திமுக அரசை பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்!!

இவ்வளவு ஆதரவுடன் படிக்கும் நீங்கள் சமூகத்தில் சிறந்தவர்களாக நிற்கக் கூடிய திறமை உள்ளவர்கள். அதற்காக கிடைத்த இந்த வாய்ப்புகளை பிடித்து பயன்படுத்த வேண்டும். கல்வியில் முன்னேற விரும்பும் மாணவர்களுக்கு இத்தகைய அரசு உதவிகள் பெரிய வாய்ப்பு. அதை பயனாக்கி சமூகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என அவர் மாணவர்களை ஊக்குவித்தார்.

“கடைசி காலத்தில் நல்ல மனசு வந்துவிட்டது”.. திமுக அரசை பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்!!
கடம்பூர் ராஜூ
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 09 Jan 2026 11:32 AM IST

தூத்துக்குடி, ஜனவரி 09: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜா, மாணவிகளுடன் உரையாடினார். அப்போது, இன்றைய மாணவர்கள் கல்வியில் மேம்பட பல வகைகளில் அரசு பக்கபலமாக நிற்கிறது. நாங்கள் பள்ளியில் படிக்கும் நாட்களில், நோட்டுப் புத்தகம் முதல் சைக்கிள் வரை எல்லாவற்றையும் நாங்களே வாங்க வேண்டியிருந்தது. பள்ளிக்கு சைக்கிளில் வருவது அப்போது பெருமையான ஒன்று, கையில் இருக்கிற சிலருக்கே அந்த வாய்ப்பு. அதனால் ஒரு சைக்கிள் இருந்தால் சட்டை காலரை தூக்கி பெருமையாகச் செல்வோம் என பால்ய காலத்தை நினைவுகூர்ந்தார்.

மேலும் படிக்க: தீபாவளி, பொங்கல் ஆஃபர் போல்.. ஆஃபர் அறிவித்து காத்திருக்கிறார் விஜய்.. திருமாவளவன் விமர்சனம்!

கல்விக்கான முழு ஆதரவு:

ஆனால், இன்றைய தலைமுறைக்கு அரசு வழங்கும் உதவிகள் கணக்கில்லாதவை. சைக்கிள், பஸ் பாஸ், பாடப்புத்தகங்கள், நோட்புக், பேனா, பென்சில் புத்தகப்பை, வரைபடம், ஜாமென்ட்ரி பாக்ஸ் என அமைத்து கல்வி உபகரணங்களையும் அரசே வழங்குகிறது. மாணவர்களுக்கு எந்த செலவும் கிடையாது. காலில் போடும் காலணி முதல் மடிக்கணினி வரை இன்றைக்கு அரசே கொடுத்து படிக்க வைக்கிறது என்றார்.

இந்த வாய்ப்புகள் பொன்னானவை:

இந்த தலைமுறை மாணவர்கள் மிகப் பெரும் பாக்கியசாலிகள். இவ்வளவு ஆதரவுடன் படிக்கும் நீங்கள் சமூகத்தில் சிறந்தவர்களாக நிற்கக் கூடிய திறமை உள்ளவர்கள். அதற்காக கிடைத்த இந்த வாய்ப்புகளை பிடித்து பயன்படுத்த வேண்டும். கல்வியில் முன்னேற விரும்பும் மாணவர்களுக்கு இத்தகைய அரசு உதவிகள் பெரிய வாய்ப்பு. அதை பயனாக்கி சமூகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என அவர் மாணவர்களை ஊக்குவித்தார்.

மடிக்கணினி திட்டம் – தமிழ்நாட்டின் பெருமை:

படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது சிறந்த திட்டமாகும். உலகத்திலேயே படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணி வழங்கிய முதலாவது மாநிலம் தமிழ்நாடு தான். இதையே முன்மாதிரியாக கொண்டு நாட்டில் பல மாநிலங்களும் இத்திட்டத்தை செயல்படுத்தின. இடைக்காலத்தில் நிறுத்தப்பட்ட இந்த திட்டம் இப்போது மீண்டும் தொடங்கியது வரவேற்கத்தக்கது.

மேலும் படிக்க: அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு நோ.. கூட்டணியில் டிடிவி? மறுக்காத இபிஎஸ்!!

திமுக அரசுக்கு பாராட்டு:

நல்லவேளையாக 10 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என்ற நல்ல மனசு, திமுக அரசுக்கு கடைசி காலத்திலாவது வந்து இருக்கிறது பாராத்தக்கது என்று புகழ்ந்து கூறினார். தேர்தல் நெருங்கும் சமயத்தில், திமுக அரசை அதிமுக மூத்த தலைவர் ஒருவர் பாராட்டியது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.