தமிழ்நாடு தாங்காது “சிஎம் சார்”… சட்டம் – ஒழுங்கு குறித்து உதயநிதி காட்டமான விமர்சனம்!
Udhayanidhi Criticizes CM Vijay: சட்டம் - ஒழுங்கை பேணி காப்பது தொடர்பாக நீண்ட நேரம் எடுத்து கத்துக் கொண்டு வரும் வரை தமிழகம் தாங்காது சிஎம் சார் என்று முதல்வர் ஜோசப் விஜய்க்கு எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் சட்டம் – ஒழுங்கை காப்பாற்றுவதை கத்துக் கொண்டு வரும் வரை தமிழகம் தாங்காது என்று எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டத்தில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு அவரது உடல் பாதி மணலில் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வரும் குற்ற சம்பவங்களை பார்க்கும் போது, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா அல்லது இல்லையா என்று மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்து வருகிறது. தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஷோபா மாடல் அரசு அமைந்தது முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்பன உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடக்காத நாளே இல்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் விஜய் பக்கம் பக்கமாக பேப்பர் வைத்துக்கொண்டு சட்டம்- ஒழுங்கு குறித்து வாய் கிழிய பன்ச் டயலாக் பேசி வந்தார்.
ஆழ்ந்த உறக்கத்தில் முதல்வர் ஜோசப் விஜய்
ஆனால், தமிழகத்தின் முதல் அமைச்சர் ஆனதும் ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்று விட்டார். தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த சிங்க பெண்கள் சிறப்பு அதிரடி படை தொடக்க விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை தள்ளி வைக்கப்பட்டதா அல்லது இந்த முயற்சியே தள்ளி வைக்கப்பட்டது என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடி படை என பெயரையும்.
மேலும் படிக்க: அமைச்சரிடம் தரிசனத்துக்கு லஞ்சம்: இருவர் பணி நீக்கம் – அர்ச்சகர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்!




தமிழ்நாடு தாங்காது சிஎம் சார்
அதில் ஈடுபட உள்ள காவலர்களுக்கான சீருடையையும் மாற்றுவது தான் மாற்றமா இல்லை சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா. முதல்வர் ஜோசப் விஜய் டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம்- ஒழுங்கை காப்பாற்றும் வரை தமிழ்நாடு தாங்காது சிஎம் சார் என்று அந்த அறிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்றவுடன் பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரிப்பு
ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதே போல, சென்னையில் 16 வயது சிறுவன் போலீசாரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இதே போல, ஆவடியில் 61 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டது. இவ்வாறாக குற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சரிடம் ரூ.4 ஆயிரம் கையூட்டு பெற்ற அர்ச்சகர்.. வசமாக சிக்கியது எப்படி!