மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் தொழில்பழகுநர் பயிற்சி – விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு கால தொழில்பழகுநர் பயிற்சிக்குத் தகுதியான பொறியியல் பட்டதாரிகள், பட்டயப் படிப்பை முடித்தவர்கள், கலை, அறிவியல், வணிகவியல் பட்டதாரிகள் ஆகஸ்ட் 28, 2026 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம் என மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூலை 29 : சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு கால தொழில்பழகுநர் பயிற்சிக்குத் தகுதியான பொறியியல் பட்டதாரிகள், பட்டயப் படிப்பை முடித்தவர்கள், கலை, அறிவியல், வணிகவியல் பட்டதாரிகள் ஆகஸ்ட் 28, 2026 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம் என மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. ஐடிஆ படித்தவர்கள் எம்எம்வி, மெக்கானிக் டீசல், எலக்ட்ரீஷியன், ஆட்டோ எலக்ட்ரீஷியன், வெல்டர், ஃபிட்டர், டர்னர், பெயின்டர் ஆகிய பிரிவுகளில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் தொழில்பழகுநர் பயிற்சி
இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு கால தொழில் பழகுநர் பயிற்சிக்காக இயந்திரவியல், ஆட்டோமொபைல் பொறியியல், கட்டட பொறியியல், மின்சாரம் மற்றும் மின்னணுவியல் பொறியியல், கணினி தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிக்க : பழனி நில மோசடி வழக்கில் திருப்பம்.. சிக்கிய முக்கியப் புள்ளிகள்.. தட்டி தூக்கிய சிபிசிஐடி!




அதேபோல், பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.எம். உள்ளிட்ட கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் இளநிலைப் பட்டம் பெற்றவர்களும் இந்தப் பயிற்சியில் சேர தகுதியுடையவர்கள். இதற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 2022, 2023, 2024, 2025, 2026 ஆகிய ஆண்டுகளில் படிப்பை முடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான மாணவர்களாக இருக்க வேண்டும்.
மேலும், தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டத்தின் https://nats.education.gov.in இணையதளத்தில் பதிவு செய்து ஆகஸ்ட் 28, 2026 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் மேலே குறிப்பிட்ட இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். போக்குவரத்து துறைில் தொழில் பழக நினைப்பவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அல்லாமல் செல்போன் பயன்படுத்தவும், ஸ்பீக்கர் போனில் பேசுவதும், வீடியோ பார்ப்பது தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் ஹெட் போன் அல்லது இயர் போன் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல, அரசு பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்துகளில் பாடல்களை சத்தமாக ஒலிக்க விடக்கூடாது. இது தொடர்பாக 24 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 16 சென்டிமீட்டர் அகலம் கொண்ட விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை அனைத்து அரசு பேருந்துகளிலும் ஒட்ட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் பயணிகளுக்கும், பயணிகளால் சக பயணிகளுக்கும் பயணத்தின் போது தொந்தரவு இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.