AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சட்டமன்ற வரலாற்றில் முதல்முறை.. சபாநாயகர் நாற்காலியில் சத்யபாமா.. அவையில் எழுந்த பலத்த கைதட்டல்… பின்னணி என்ன!

Sathyabama MLA : தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோர் இல்லாத நிலையில், திருப்பூர் வடக்கு தொகுதி எம். எல். ஏ. சத்யபாமா பேரவை தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை வழி நடத்தினார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சட்டமன்ற வரலாற்றில் முதல்முறை.. சபாநாயகர் நாற்காலியில் சத்யபாமா.. அவையில் எழுந்த பலத்த கைதட்டல்… பின்னணி என்ன!
சத்யபாமா எம்எல்ஏ.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 02 Sep 2026 17:19 PM IST

தமிழக சட்டப்பேரவையில் துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இல்லாத நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் திருப்பூர் வடக்கு தொகுதி பெண் எம்எல்ஏவான சத்தியபாமா பேரவை தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்தினார். தமிழக சட்டமன்றத்தில், சபாநாயகர் இல்லாத பட்சத்தில், துணை சபாநாயகர் அவை நடத்துவார். இவரும் இல்லாத நிலையில், சட்டமன்ற மாற்று பேரவை தலைவராக அறிவிக்கப்பட்டவர்களின் யாரேனும் ஒருவர் அவரையே தொடர்ந்து வழிநடத்துவார். அதன் அடிப்படையிலேயே, பெண் எம்எல்ஏ சத்தியபாமா இன்று பேரவை தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை சிறப்பாக நடத்தி இருந்தார். இதனால், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் எம்எல்ஏ என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சட்டமன்ற மாற்று பேரவை தலைவர்கள் விவரம்

தமிழக சட்டப்பேரவையில் எந்தவித தடையும் இன்றி அவையை நடத்துவதற்காக மாற்று தலைவர்கள் குழு அமைக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், தமிழக சட்டப்பேரவையின் மாற்று பேரவை தலைவர்கள் அடங்கிய பட்டியலை சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர் ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். அதில்,

மேலும் படிக்க: தொழிலாளர்கள்- நெசவாளர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர்கள் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்.. என்ன தெரியுமா?

  • திருப்பூர் வடக்கு தொகுதி பெண் எம்எல்ஏ சத்தியபாமா.
  • தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த விஜய் சரவணன்.
  • மதார் பதுருதீன்.
  • அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம்.
  • காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட்.
  • திமுக சார்பில் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

துணை பேரவை தலைவர் என குறிப்பிட்ட அமைச்சர்

இன்று சத்தியபாமா தலைமையில் நடைபெற்ற அவையில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் எழுந்து பேசுகையில், தவறுதலாக துணை பேரவை தலைவர் எனக் குறிப்பிட்டார். அப்போது, சத்தியபாமா எம். எல். ஏ., தன்னை மாற்று பேரவை தலைவர் என குறிப்பிடுமாறு ஒலிவாங்கியில் தெரிவித்தார். இதைக் கேட்ட அமைச்சர் ஸ்ரீநாத் மாற்று பேரவை தலைவர் என சரி செய்து பேசத் தொடங்கினார். இவரைத் தொடர்ந்து, முன்னாள் திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து மிகவும் பொறுமையாகவும், கம்பீரமாகவும் சத்யபாமா எம். எல். ஏ. அவையை நடத்தி உள்ளார்.

சத்யபாமாவுக்கு பாராட்டு தெரிவித்த முன்னாள் அமைச்சர்

லேடி வெல்லிங்டன் இந்த சட்டப்பேரவைக்கு வழங்கிய ஆசனத்தில் ஒரு பெண்மணி பேரவை தலைவராக அமர வேண்டும் என்பது நீண்ட காலமாக இருந்து வந்த எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்பு, மாற்றுத் தலைவராக நீங்கள் இங்கு இருக்கையில் அமர்ந்திருப்பதால் நிறைவேறி உள்ளது. இதனால், நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். இதற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார். இதேபோல, பல்வேறு கட்சி உறுப்பினர்களும் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் படிக்க: சென்னை டூ கன்னியாகுமரி வரை… முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த முத்தான திட்டங்கள்.. என்னென்ன தெரியுமா!

Follow Us