குடும்பத்துடன் லண்டன் செல்லும் மு.க.ஸ்டாலின் – வெளியான முக்கிய தகவல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தனது குடும்பத்துடன் வருகிற ஜூலை 5, 2026 லண்டன் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் இன்பன் உதயநிதி படித்த கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கலந்துகொள்ளவிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, ஜூலை 1: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் வருகிற ஜூலை 5, 2026 லண்டன் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பன் உதயநிதி லண்டனில், விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப்படிப்பை முடித்துள்ளார். தற்போது அவர் கலைஞர் டிவி மற்றும் ரெட் ஜெயண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்புகளையும் அவர் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்துடன் லண்டன் செல்லும் மு.க.ஸ்டாலின்
இந்த நிலையில் இன்பன் உதயநிதி படித்த கல்லுாரி பட்டமளிப்பு விழா, இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற உள்ளது. இந்த விழாவில், ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பங்கேற்கின்றனர். இதற்காக, வரும் 5, 2026 அன்று அனைவரும் லண்டன் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு, 10 நாட்கள் தங்கி, ஓய்வெடுக்கும் அவர்கள், வருகிற ஜூலை 20, 2026 அன்று சென்னை திரும்புகின்றனர்.
இதையும் படிக்க : “2 சீட்டுனு கிண்டல் பண்ணாங்க.. இப்போ அருமை புரியுதா?”.. திமுகவை சீண்டிய திருமாவளவன்?




பட்டப்படிப்பை முடித்து சென்னை திரும்பிய இன்பன் உதயநிதி தற்போது கலைஞர் டிவி நிர்வாக பொறுப்பையும், ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பையும் அவர் ஏற்றுள்ளார். அவர் தற்போது ரெட் ஜெயண்ட் சார்பாக பிரம்மாண்ட படங்களை தயாரித்தும் விநியோகம் செய்தும் வருகிறார்.
தற்போது கமல்ஹாசன் – ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படத்தையும் இன்பன் உதயநிதி தயாரித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்தப் படத்தின் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அடுத்ததாக அவரது அம்மா கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தையும் இன்பன் உதயநிதி தயாரிக்கிறார். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளராக உதயநிதி ஸ்டாலின் இருந்தார். அவர் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் தற்போது அந்த பொறுப்பு இன்பன் உதயநிதிக்கு சென்றுள்ளது. தற்போது இன்பன் உதயநிதி பட்டம் பெறும் நிகழ்விற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : திமுக மறுசீரமைப்புக்கு ஆலோசனை குழு அமைப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திமுகவில் மறுசீரமைப்பு செய்யவிருப்பதாக கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு குழு ஒன்றை அறிவித்திருக்கிறார்.திமுகவின் கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை ஒரே சீரான மறுசீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 10 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் பிறகு கட்சியில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்படும் என்றும் முக்கிய பொறுப்புகள் மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.