நான் முதல்வன் திட்டம்… Delete செய்யவே முடியாது – மு.க.ஸ்டாலின் கண்டனம்
முந்தைய திமுக அரசால் அறிமுப்படுத்தப்பட்ட நான் முதல்வன் திட்டம் திறன் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் நான் முதல்வன் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் உறுவாக்கப்பட்டது. இதன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான நவீன திறன் பயிற்சிகள், போட்டித் தேர்வு வழிகாட்டுதல்களை வழங்கும். இந்த நிலையில் தற்போது தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் நான் முதல்வன் திட்டம் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும், அதில் உள்ள பழைய பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதையும் படிக்க : அரசுப் பள்ளியில் தவெகவினர் ரீல்ஸ்… மாணவர்கள் கல்வியை பாதிக்கும் செயலை ஏற்க முடியாது.. அண்ணாமலை கண்டனம்!




நான் முதல்வன் திட்டம் திறன் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த திட்டத்தின் சமூக வலைதள பக்கங்களில் இடம் பெற்றிருந்த நான் முதல்வன் திட்ட பயனாளிகளின் சாதனைகள் உள்ளிட்டவை வீடியோ பதிவுகளாக இடம் பெற்றஇருந்தன. தற்போது அந்த பதிவுகள் நீக்கப்பட்டு, கடந்த மே 15, 2026 முதலான பதிவுகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலினின் பதிவு
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின்… pic.twitter.com/yqycoIbpAE
— M.K.Stalin (@mkstalin) June 20, 2026
இந்த நிலையில் இது குறித்து தனது சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், நீங்கள் நான் முதல்வன் சமூக வலைதள பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
இதையும் படிக்க : செந்தில் பாலாஜியின் சகோதரரை வலைவீசி தேடும் போலீஸ்.. சென்னைக்கே வந்த கரூர் போலீசார்.. அதிரடி சோதனை!!
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் நான் முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நான் முதல்வன் திட்டம் மூலம் டேட்டா சயின்ஸ், ஏஐ போன்ற தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதே போல டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி போன்ற அரசு தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.