AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

யாரோ தூண்டுதலின் பேரில்…. மின்தடை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு கருத்து

தமிழ்நாட்டில் நிலவும் மின் தடை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், ஒரு சில இடங்களில் தனி நபர்களின் தவறுகளால் மின்சாரம் தடைபடுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. யாருடைய தூண்டுதலால் அவ்வவாறு செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்றார். அவரது கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாரோ தூண்டுதலின் பேரில்…. மின்தடை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு கருத்து
அமைச்சர் நிர்மல்குமார்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 May 2026 19:00 PM IST

சென்னை, மே 23 : சென்னை உட்பட தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக கூறப்படுகிறது. இது குறித்து மக்கள் ஆங்காங்கே பாராட்டத்தில் ஈடுபடுவதையும் பார்க்க முடிகிறது. மேலும் ஒரு சிலர் மின்சாரத்துறையை குறிப்பிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மின்தடை ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுத்துவரும் நிலையில் அதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். இதுகுறித்து பேசிய அவர், ஒரு சிலர் யாருடைய தூண்டுதலின் பெயரிலோ இதை செய்கிறார்கள் என பரபரப்பு தகவலை வெளியிட்டார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தூண்டுதலின் பெயரில் மின்தடா?

தமிழ்நாட்டில் நிலவும் மின் தடை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பில் உள்ளது. உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள் மற்றும் சேதமடைந்த மின் கம்பிகளால் மின்தடை ஏற்பட்டு வருகிறது என்றார்.

இதையும் படிக்க : தவெக அரசு ரீல்ஸ்- இல் காட்டும் ஆர்வத்தை பெண்கள் பாதுகாப்பில் காட்டவில்லை.. முதல்வர் விஜய் மீது நயினார் பாய்ச்சல்!

மின்தடை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

 

தொடர்ந்து பேசிய அவர், ஒரு சிலர் யாருடைய தூண்டுதலின் பெயரிலோ இதை செய்கிறார்கள் என்ற கருத்துகள் நிலவுகின்றன. ஒரு சில இடங்களில் தனிநபர்களின் தவறுகளால் மின்சாரம் தடைபடுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. யாருடைய தூண்டுதலால் அவ்வவாறு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் மீது இன்று இரவுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 99 சதவிகிதம் சிறப்பாக செயல்படும் மின்சாரத்துறை ஊழியர்கள் மத்தியில் 1 சதவிகிதம் கருப்பு ஆடுகளை கண்டறிவோம் என்றார்.

இதையும் படிக்க : கோவை சிறுமி வழக்கு – கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் – முதல்வர் விஜய் உறுதி

மேலும் பேசிய அவர், எங்கெல்லாம் தவறுகள் நடந்திருக்கறோ அதை சரி செய்து வருகிறோம், இதற்கு சில நாட்களோ அல்லது சில மாதங்களோ பிடிக்கலாம். கண்டிப்பாக முழுமையாக சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சூரிய மின் உற்பத்தியில் பல இடங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன . மேலும் மின்சாரத்துறையில் எவ்வளவு சுரண்டமுடியுமோ அவ்வளவு சுரண்டியிருக்கிறார்கள் என்றார்.

Follow Us