“என்னால் கிடைத்த ரூ.5000”.. சந்தோஷமா வாங்கிக்கோங்க.. விஜய் பரபர அறிவிப்பு!!

TVK vijay about magalir urimai thogai: இப்போதுகூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான்.

என்னால் கிடைத்த ரூ.5000.. சந்தோஷமா வாங்கிக்கோங்க.. விஜய் பரபர அறிவிப்பு!!

கோப்புப் புகைப்படம்

Updated On: 

13 Feb 2026 11:49 AM

 IST

சென்னை, பிப்ரவரி 13: திமுகவை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசை நாம்தான் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.5000 பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்த்தார்கள். அதனால், நமது நமது திராவிட மாடல் அரசு முந்திக்கொண்டது என்று அவர் தெரிவித்தார். அதன்படி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000ம், கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000ம் என மொத்தம் ரூ.5,000 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இதையும் படிக்க: மகளிர் உரிமைத் தொகை.. “வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு”.. காலையிலேயே சர்ப்ரைஸ் தந்த முதல்வர் ஸ்டாலின்!!

இந்த ஆண்டு மட்டும் கோடைக் காலம் வருகிறதா?

இந்நிலையில், திமுகவின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ள விஜய், திமுக அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்? இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான்.

விசில் சின்னம் மீதான அச்சம்:

குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம். இப்போதுகூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான்.

தம்பி விஜய்யால் கிடைத்த ரூ.5000:

அதுமட்டுமா? திமுக தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் தவெகவைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்துள்ளார். எனவே, என்னருமைத் தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.

இதையும் படிக்க: “மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000″ஆக உயர்த்தி வழங்கப்படும்.. முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி!!

திகில் ஊட்டும் அளவு விசல் ஊதும் மகளிர்:

நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி. திமுக அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வழக்கமான நீரிழிவு பரிசோதனை தவறான முடிவுகளை தரலாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டெல்லியில் காரில் இறந்த நிலையில் கிடந்த 3 பேர் - பரபரப்பு தகவல்
வாட்ஸ்அப் வெப்பில் நேரடி வாய்ஸ், வீடியோ அழைப்புகள்.. புதிய வசதி அறிமுகம்
அமெரிக்க வெளியிட்ட வரைபடத்தில் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்