தாத்தா பாட்டி வீட்டில் வசித்து வந்த வடமாநில 8 வயது சிறுமி.. திடீர் மாயத்தால் பெரும் பரபரப்பு!
8 Years Old Girl Went Missing In Kanchipuram | காஞ்சிபுரத்தில் தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்த 8 வயது சிறுமி திடீரென மாயமான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம், அக்டோபர் 20 : காஞ்சிபுரத்தில் (Kanchipuram) தாத்தா, பாட்டி உடன் வசித்து வந்த 8 வயது சிறுமி, திடீரென மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் (Jharkhand) மாநிலத்தை சேர்ந்த இந்த சிறுமி, தனது தாத்தா மற்றும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தான், அவர் திடீரென காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காணாமல் போன சிறுமியை தேடி வருகின்றனர்.
தாத்தா பாட்டியுடன் இருந்த சிறுமி திடீர் மாயம்
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கல்பனா. இவர் கணவரை பிரிந்த நிலையில், தனது 8 வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தான், கல்பனா தனது பெற்றோர் உடன் வாழ முடிவு செய்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள கருமாங்குழி பகுதியில் தனது மகளுடன் வசிக்க தொடங்கியுள்ளார். அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றியும் வருகிறார்.
இதையும் படிங்க : Tamil Nadu Weather forecast: வானிலை மையம் எச்சரிக்கை – இந்த 22 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்




துர்கா பூஜைக்கு சென்ற தாய் – மகள் மாயம்
இந்த நிலையில் தான், துர்கா பூஜையில் கலந்துக்கொள்வதற்காக அவர் ஜார்கண்ட் சென்றுள்ளார். அப்போது தனது மகளை தாத்தா, பாட்டியிடம் விட்டுவிட்டு அவர் சென்றுள்ளார். அப்போது சிறுமி வீட்டை விட்டு வெளியேறி நெடுஞ்சாலைக்கு தனியாக சென்றுள்ளார். இந்த நிலையில், அவர் அங்கிருந்து மாயமாகியுள்ளார். சிறுமியை எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாத்தா, பாட்டி அது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க : சென்னையில் இரவு நேரங்களில் தொடரும் மழை.. வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சொல்லும் தகவல்
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர். தாத்தா, பாட்டியுடன் இருந்த சிறுமி திடீரென காணாமல் போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.