AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை

Tamil Nadu Rain Alert : தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் தனியார் வானிலை நிபுணர் ஹேமச்சந்திரனும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும், நாளையும் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Aug 2026 15:03 PM IST

சென்னை, ஆகஸ்ட் 14 : தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களில் ஆகஸ்ட் 14, 2026 இன்று இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

மேலும் திருச்சி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு.. 10 மாவட்ட செயலாளர்கள் மாற்றப் பட வாய்ப்பு?

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15, 2026 நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் வட கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவி்கப்பட்டுள்ளது.

தனியார் வானிலை நிபுணர் ஹேமச்சந்திரனின் பதிவு

 

இதற்கிடையில் தனியார் வானிலை நிபுணர் ஹேமச்சந்திரனும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆகஸ்ட் 14, 2026 இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவி வரும் நிலையில் ஆகஸ்ட் 14, 2026 இன்றும், நாளையும் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : அதிமுக அதிருப்தியாளர்கள் அணியில் பிளவு?.. எஸ்.பி.வேலுமணி முடிவை எதிர்த்து இபிஎஸ் போராட்டத்தில் தங்கமணி பங்கேற்பு!!

தென்மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்திருந்தாலும், வளிமண்டலத்தில் நிலவும் ஈரப்பதம் மற்றும் பகல் நேர வெப்பம் காரணமாக தமிழகத்தில் இரவு வநேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மேலும் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்தில் சிில பகுதிகளில் ஆகஸ்ட் 14, 2026 இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. அதே போல, காவிரி டெல்டா மற்றும் உள் மாவட்டங்களான திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளிலும் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளார்.

Follow Us