இரண்டு மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..
ஆகஸ்ட் 14, 2026: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருச்சியில் 39.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. தொடர்ந்து மதுரையில் 39 டிகிரி, ஈரோட்டில் 38.6 டிகிரி, தஞ்சாவூர் மற்றும் பாளையங்கோட்டையில் தலா 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வட உள் தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை: சென்னையைப் பொறுத்தவரையில், நுங்கம்பாக்கத்தில் 36.3 டிகிரி செல்சியஸ், மீனம்பாக்கத்தில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை […]
ஆகஸ்ட் 14, 2026: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருச்சியில் 39.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. தொடர்ந்து மதுரையில் 39 டிகிரி, ஈரோட்டில் 38.6 டிகிரி, தஞ்சாவூர் மற்றும் பாளையங்கோட்டையில் தலா 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வட உள் தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை:
சென்னையைப் பொறுத்தவரையில், நுங்கம்பாக்கத்தில் 36.3 டிகிரி செல்சியஸ், மீனம்பாக்கத்தில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் குவியும் தென்மாநில முதல்வர்கள்.. அமித் ஷா தலைமையில் மாபெரும் மாநாடு.. தேதி குறித்த மத்திய அரசு!
இதனிடையே, தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
ஆகஸ்ட் 14ஆம் தேதி தேனி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தருமபுரி ரயில் நிலையத்தில் பேரதிர்ச்சி.. ஓடும் ரயிலில் இருந்து விழுந்த சிறுவன் உடல் துண்டாகி பலி.. தந்தை கண்முன்னே சோகம்!
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை தொடரும் மிதமான மழை:
ஆகஸ்ட் 16ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 17ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 18ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.