அடுத்த 2 நாட்களுக்கு இந்த 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்க
தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி உட்பட 5 மாவட்டங்களில் ஜூலை 31, 2026 மற்றும் ஆகஸ்ட் 1, 2026 சனிக்கிழமையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆகஸ்ட் 31, 2026 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜூலை 30 : தமிழகத்தில் கோவை உட்பட 5 மாவட்டங்களில் ஜூலை 31, 2026 மற்றும் ஆகஸ்ட் 1, 2026 சனிக்கிழமையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு இந்த 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
இதன் காரணமாக ஜூலை 31, 2026 மற்றும் ஆகஸ்ட் 1, 2026 சனிக்கிழமை ஆகிய 2 நாட்களுக்கு கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்துக்கு வினாடிக்கு 3500 கன அடி நீர் திறக்க வேண்டும்.. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!




மேலும், தமிழ்நாட்டில் ஜூலை 31, 2026 நாளை இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக ஆகஸ்ட் 1, 2026 சனிக்கிழமை, இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களிலில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 2, 2026 அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் லேசான மழையும், ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 5, 2026 ஆகிய 3 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் நாளை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
இதையும் படிக்க : கடைசி நேரத்தில் ஆம்னி பஸ் கேன்சல்.. பணத்தையும் தராத நிறுவனத்திற்கு ரூ.25,000 அபராதம்!!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆகஸ்ட் 31, 2026 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.