AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நீடிக்கும் மழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை ?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நீடிக்கும் மழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை ?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Jul 2026 14:46 PM IST

ஜூலை 29, 2026: தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, ஜூலை 29-ஆம் தேதி (இன்று) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எந்தெந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை:

ஜூலை 30-ஆம் தேதியைப் பொருத்தவரையில், நீலகிரி மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 31-ஆம் தேதியைப் பொருத்தவரையில், கோவை, நெல்லை, நீலகிரி, தேனி மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “இனி லாக்கப் மரணங்கள் நடக்கவே கூடாது!”.. ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

ஆகஸ்ட் 1-ஆம் தேதியைப் பொருத்தவரையில், கோவை, நெல்லை, நீலகிரி, தேனி மற்றும் குமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் எனவும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை:

அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை!”.. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் பின் செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி!

அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில், கடந்த சில வாரங்களாகவே மதுரை மாவட்டத்தில் தொடர்ச்சியாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது. அதேபோல், ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்த வெப்பநிலையும் பதிவாகி வருகிறது. எனவே, வரக்கூடிய நாட்களில் வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சில இடங்களில் மட்டும் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக வெப்பநிலை பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us