AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஐதராபாத் – மங்களூரு சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. எப்போது வரை!

Hyderabad - Mangaluru Special Train Service | ஹைதராபாத் - மங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், அது நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஐதராபாத் – மங்களூரு சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. எப்போது வரை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Sep 2026 08:59 AM IST

சேலம், செப்டம்பர் 08 : ஐதராபாத் – மங்களூரு (Hyderabad – Mangaluru) சென்டிரல் வாராந்திர சிறப்பு ரயில், நாளை (செப்டம்பர் 09, 2026) முதல் நவம்பர் 25, 2026 வரை ஒவ்வொரு புதன் கிழமையும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்படுவதன் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயனடைய உள்ளனர். இந்த நிலையில், இந்த சிறப்பு ரயில் சேவையின் அட்டவணை குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஐதராபாத் – மங்களூரு சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள இந்த ரயில் சேவை, ஐதராபாத்தில் இருந்து அதிகாலை 4.20 மணிக்கு புறப்பட்டு, சேலம் வந்தடையும். பிறகு அப்படியே ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, காசர்கோடு வழியாக காலை 9.30 மணிக்கு மங்களூரு சென்றடையும். இதேபோல, மறுமார்க்கத்தில் மங்களூரு சென்டிரல் – ஐதராபாத் வாராந்திர சிறப்பு ரயில், நாளை (செப்டம்பர் 09, 2026) முதல் நவம்பர் 26, 2026 வரை ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தரையில் அமர்ந்த திமுக தூக்கிவிட்ட தவெக – அவையில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன்

ஒவ்வொரு வியாழக்கிழமையும் இயக்கப்படும் ரயில்

மறுமார்க்கமாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் இயக்கப்படும் ரயில், மங்களூரு சென்டிரல் பகுதியில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும். அது அப்படியே, காசர்கோடு, பாலக்காடு, ஈரோடு, சேலம் வழியாக சென்று சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஐதராபாத்தை சென்றடையும். இந்த ரயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது தமிழ்நாடு, கேரளா மற்றும் ஹைதராபாத் பயணிகளுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க : தமிழக சட்டமன்ற தொடர்.. நாளையும் கேள்வி நேரத்துக்கு நோ.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திடீர் அறிவிப்பு!

Follow Us