Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்ஸ்டாகிராம் ரூபத்தில் வந்த எமன்…திருமணமான மகளை கொலை செய்த தந்தை…நிர்கதியான 2 வயது பெண் குழந்தை!

Tiruppur Crime: திருப்பூரில் இன்ஸ்டாகிராமில் பழகிய நபருடன் மகள் வீட்டை விட்டு ஓடியதால் பெற்ற மகளை தந்தையை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார். இதில் , கைது செய்யப்பட்ட அந்த நபர் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலத்தை அளித்துள்ளார் .

இன்ஸ்டாகிராம் ரூபத்தில் வந்த எமன்…திருமணமான மகளை கொலை செய்த தந்தை…நிர்கதியான 2 வயது பெண் குழந்தை!
திருப்பூரில் மகளை குத்தி கொலை செய்த தந்தை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 23 Jan 2026 07:19 AM IST

திருப்பூர் மாவட்டம், முருகம்பாளையம் பாறைக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார், சிம்யா தம்பதி. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், சிம்யாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை, அவரது கணவரும், சிம்யாவின் தந்தை ஆறுமுகமும் கண்டித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்யா தனது குழந்தையுடன் திடீரென மாயமாகினார். இது தொடர்பாக, ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் வீரபாண்டி போலீசார் கன்னியாகுமரியில் தனது இன்ஸ்டாகிராம் கள்ள காதலருடன் இருந்த சிம்யாவை மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, மகள் சிம்யாவிடம், ஆறுமுகம் அறிவுரை கூறியுள்ளார். அப்போது, சிம்யா அதனை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், கடும் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் வீட்டில் இருந்த கத்தியால் மகள் சிம்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

மகளை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை

மேலும், அவரது நெஞ்சு மற்றும் வயிறு பகுதியில் கத்தியால் குத்தி உள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சிம்யா உயிரிழந்தார். அப்போது, வெளியே சென்றிருந்த ஆறுமுகத்தின் மனைவி வீடு திரும்பிய போது மகள் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு சத்தமிட்டு அழுதார். உடனே அருகில் இருந்தவர்கள் இது தொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீஸ் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: நாய் கடிக்கு ஆளான சிறுவன்..பெற்றோரிடம் மறைத்ததால் விபரீதம்…3 மாதங்களுக்கு பிறகு உயிரிழந்த பரிதாபம்

தந்தை திடுக்கிடும் வாக்கு மூலம்

மேலும், ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அவர் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அதில், மதுரையை சேர்ந்த நாங்கள் திருப்பூரில் நான் எனது மனைவி, மகள் சிம்யா, அவரது கணவர் ஆகியோருடன் ஒன்றாக தங்கி இருந்து சாயப்பட்டறையில் வேலை பார்த்து வருகிறோம். எங்களுடன் பணிபுரிந்த பிரேம் குமாருக்கு, எனது மகளை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தேன்.

கொலை செய்ததற்கான காரணம்

இந்த நிலையில், எனது மகளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை நான் கண்டித்ததால், அவள் அந்த நபருடன் வீட்டை விட்டு ஓடி விட்டார். இதனால், எனக்கு பெரிய அவமானம் ஏற்பட்டது. எனவே, கள்ள உறவை விட்டு விடும்படி, அவளிடம் நான் கூறினேன். அவள் கேட்காததால் ஆத்திரம் தாங்காமல் கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தேன் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு கத்திக்குத்து – கோவையில் பயங்கரம் – காரணம் இதுவா?